பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட ஏனைய விடயங்களை களத்திலிருந்து கவனம் செலுத்தும் ஹரீஸ்

அகமட் எஸ். முகைடீன்-
ண்டி பிரதேசங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்களைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று இரவு கண்டியிலிருந்தவாறு இன்று (06) அதிகாலை சம்பவம் நடைபெற்ற திகன, தென்னங்கும்புற, பலகொள்ள மற்றும் கங்கொள்ள ஆகிய இடங்களுக்குச் சென்று முஸ்லிம் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட ஏனைய விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றார்.

திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அசம்பாவித சம்பவங்களினால் பள்ளிவாசல்கள், வீடுகள் மற்றும் வியாபார நிலையங்கள் மிகக் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ளதனை கண்ணுற்றதோடு பிரதி அமைச்சர் ஹரீஸ் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார். அதேநேரம் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியோடு அப்பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டார்.

இவ்வின வன்முறைச் சம்பவத்தின்போது அப்துல் பாஸித் என்னும் முஸ்லிம் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட விடயம் பிரதி அமைச்சர் ஹரீஸ் அங்கிருந்தபோது தெரியவந்ததோடு ஜனாசாவும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிரதி அமைச்சர் ஹரீஸ் தொடர்ச்சியாக திகன பிரதேசத்தில் இருந்தவாறு முஸ்லிம் மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட ஏனைய விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.




  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -