பொகவந்தலாவ பொகவனை தோட்டத்தில் மகனை அடித்து கொலை செய்த தந்தையும் மருமகனும்


நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்-
பொகவந்தலாவ பொகவனை தோட்டபகுதியில் தடியால் தாக்கி ஒருவர் கொலை செய்யபட்டுள்ள தாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

இச் சம்பவம் 08.03.2018.வியாழகிழமை இரவு 08மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும் மகனுக்கும் மதுபோதையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் மோதலாக மாறி தந்தையும் மருமகனும் இனைந்து தடியால் தாக்கியமை காரனமாக மகன் சம்பவ இடத்திலே உயிர் இழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

இருவர் இனைந்து குறித்த நபரை தலைபகுதியில் கடுமையாக தாக்கியமையால் அதிகமான இரத்தம் வெளியேறிமையின் காரனமாகவே குறித்த நபர் மரணித்தள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

உயிர் இழந்தவர் 37வயதுடைய ஆறுமுகம் சிவசூரியன் என அடையாளம் கானபட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரும் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு அட்டன் நீதிமன்ற நீதவானின் மரணவிசாரனையின் பின்னர் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபட உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

தாக்குதல் நடத்திய 72,மற்றும் 23வயதுடைய இரண்டு சந்தேகநபர்களும் 09.03.2018.வெள்ளிகிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்த உள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -