நாளை ஒரு மணியிலிருந்து ஊரடங்கை பிரகடனப்படுத்துமாறு அமைச்சர் ஹலீம் கோரிக்கை



ம்பத்தென்ன முல்லேகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற இனவன்முறையில் தாக்குதலுக்காக கொண்டு வந்த பெற்றோல் கைக்குண்டு தானகாவே வெடித்து உரிழந்த நபரின் பூதவுடல் நாளை தகனம் செய்யப்படவுள்ளது. அதே வேளையில் ஜம்மிய்யதுல் உலமா சபையின் ஆலோசனையின் பிரகாரம் நாளை வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுடைய ஜும்ஆ தினம் என்ற காரணத்தினாலும் மற்றும் பூதவூடல் தகனம் செய்யும் நேரத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்படாத வாறும் நாளை வெள்ளிக்கிகழமை ஆறு மணியுடன் முடிவடையும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் ஒரு மணியுடன் அமுல் படுத்துமாறு பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் ரனில் விக்கிரமசிங்க மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார ஆகிய இருவரிடமும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக அமைச்சர் ஹலீம் இவ்வாறு இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்

இவ்வாறு உரிழந்த நபர் பூஜாப்பிட்டிய கலுவான பிரதேசத்தைச் சேர்ந்த குனரத்ன என்பராவர். முல்லேகம பிரதேசத்தில் முஸ்லிம்களுடைய வர்த்தக நிலையம் மற்றும் பள்ளிவாசலை இலக்கு வைத்து தாக்குதலுக்காக கொண்டு வந்த பெற்றோல் கைக்குண்டு தானாக வெடித்தமையினாலேயே இவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது . எனவே. அவருடைய பூதவுடல் நாளை வெள்ளிக்கிழமை மூன்று மணி அளவில் தனகம் செய்யப்படவுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்படாத வகையில் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -