அபிவிருத்திகளை முன்னெடுக்கும் போது பிரதேச அபிவிருத்திக் குழுவுக்கு தெரியப்படுத்த வேண்டும்
கிண்ணியா உப்பாறு காணி தனியாருக்கு விற்க முயற்சிகளும் இடம்பெற்றுள்ளது இதில் பாரிய நிதி மோசடியும் :சபையில் அப்துல்லா மஹ்ரூப் காட்டம்
கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் எந்த விதமான அபிவிருத்திகளை முன்னெடுப்பதாயினும் சரி கட்டாயமாக பிரதேச ஒருங்கிணைப்பு குழுவுக்கு அறிவிக்க வேண்டும் அவ்வாறின்றி அபிவிருத்திகளை எடுத்துச் செல்ல முடியாது இவ்வாறு அறிவிப்பு செய்வதனால் எவ் வித தடைகளும் இல்லாமலும் உரிய அபிவிருத்திகளை துரிதமாக முன்னெடுத்துச் செல்லலாம் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் நேற்று(16) கிண்ணியா நூலக மண்டபத்தில் இடம் பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்
கிண்ணியா உப்பாறு பாலத்து பகுதியில் அமையப் பெற்றுள்ள LRC க்கு சொந்தமான காணியை தனியாருக்கு விற்க முயற்சிகள் இடம் பெற்றுள்ளன இதற்கு உடைந்தையாக அரச அதிகாரிகளும் இருந்திருக்கிறார்கள் பாரிய நிதி மோசடி இடம் பெற இருந்தது தனியார் அமைப்பான ஜமாஅதே இஸ்லாமியிடம் இருந்து 50 இலட்சம் பெறப்பட்டுள்ளது சட்டவிரோதமாக சிபாரிசுகள் இடம் பெற்றுள்ளது எனவே இவ் விடயம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிண்ணியா பிரதேச செயலாளரை கேட்டுக் கொள்கிறேன்.
இந்த வருடத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் ஏப்ரல் மாதமளவில் அதிமேதகு ஜனாதிபதி கிண்ணியாவுக்கு வருகை தரவிருக்கிறார் இதில் கிண்ணியா பாலத்துக்கான வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளன இவ் வருடத்துக்குள் அதற்கான வேலைத் திட்டம் நிறைவு பெறும் இதற்காக அனைத்து நிதி ஒதுக்கீடுகளையும் சுமார் 750 மில்லியன் ஒதுக்கப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு இது தொடர்பில் ஜனாதிபதி வழியுறுத்தியுள்ளார்.கடந்த வருடத்தை விடவும் இவ் வருடம் அதிகளவான அபிவிருத்திகளை எமது மாவட்டம் காணவிருக்கிறது இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிரதம மந்திரி முன்னெடுத்துள்ளார் மெகா சிட்டி பாரிய அபிவிருத்தி திட்டங்களை பிரதம மந்திரி நாட்டில் ஐந்து மாவட்டங்களான காலி,மாத்தரை,யாழ்ப்பாணம்,கொழும்பு உட்பட திருகோணமலையிலும் முன்னெடுக்கவுள்ளனர் இதில் திருகோணமலையில் கிண்ணியா நகர அபிவிருத்தியில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நாட்டின் ஒத்துழைப்பின் ஊடாக இது தொடர்பான கூட்டம் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது .இது தவிர நகர அபிவிருத்திக்காக 700 மில்லியன்களை கிண்ணியா நகர அபிவிருத்திக்கு ஒதுக்கீடு செய்துள்ளார்கள் இதற்காக கிண்ணியா நகர சபையின் செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் இவ் விடயம் தொடர்பில் ஒத்துழைப்புக்களை வழங்கி வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதுடன் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவுக்கும் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். கிண்ணியா அபிவிருத்திகளில் வீதிகள் பாலங்கள், கலாசார மண்டபம் , கைத் தொழில் பேட்டைகள் என்பன உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது .கிண்ணியாவில் வீடு வசதிகள் இல்லாத குடும்பங்களுக்கு கடந்த கால சுனாமியினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கான வீட்டுத் திட்டங்களையும் மீள்குடியேற்ற அமைச்சு,நல்லிணக்க அமைச்சு,தேசிய வீடமைப்பு அமைச்சின் ஊடாக வீட்டுத் திட்டங்களையும் பெற்றுக் கொடுக்கவுள்ளோம் .இவ்வாறு இது தவிர மண் டிப்பர் வாக போக்குவரத்தினாலும் எமது உயிர்கள் பறிக்கப்படுகின்றன வெளியூர்களில் இருந்து வருகின்ற மண் டிப்பர்களுக்கு அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன கிண்ணியா ஊடாக டி சந்தி வழியாகவோ ஆலங்கேணி வழியாகவோ மண் டிப்பர்களை செல்ல விடாது உடனடியாக தடை செய்யுமாறு சபையில் உள்ள பொலிஸாரையும் இதன் போது கேட்டுக் கொள்கிறேன்
4ம் கட்டை ஊடாகவே செல்ல வேண்டும் எனவும் இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.திருகோணமலை மாவட்டத்தில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றபோது எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் தங்களது பாதுகாப்பு கடமைகளில் அண்மையில் ஈடுபட்டு வந்த முப்படையினர் பொலிஸாருக்கும் தனது நன்றிகளையும் இதன் போது தெரிவித்தார். மேலும் இவ் கிண்ணியா ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக்,துறைரட்ணசிங்கம்உட்பட கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் ,உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.றியாத் திணைக்கள அரச அதிகாரிகள் முப்படையினர் என பலரும் கலந்து கொண்டனர்.