அட்டன் பொலிஸ் பிரிவில் கார் விபத்து..!


க.கிஷாந்தன்-

ட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் டயகம பிரதான வீதியில் போடைஸ் என்.சி பகுதியில் கார் ஒன்று 02.03.2018 அன்று காலை 8 மணியளவில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த ஒருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் நான்கு பேர் பயணித்துள்ளதாகவும், இதில் ஒருவருக்கு மாத்திரம் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், மற்றையவர்களுக்கு பெரியளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.


குளியாப்பிட்டிய பகுதியிலிருந்து அக்கரப்பத்தனை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த போது இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.


என்.சி பகுதியில் உள்ள பாரிய வளைவினை திருப்பும் போது மீண்டும் திருப்புவதற்கு முடியாமல் போனமையில் கார் கீழே பாய்ந்து விழுந்துள்ளமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -