ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-
கண்டியில் 5ஆவது நாளாக களத்தில் நிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இன்று (09) கட்டுகஸ்தோட்டை, எந்தேரமுல்ல பிரதேசத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட சகல வீடுகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக கிராம சேவையாளர்களினால் தற்போது மதிப்பீடு செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. இன்று அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக, பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் விசேட படையினர் களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று பிற்பகல் குருந்துகொல்ல பிரதேசத்துக்குச் சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம், நள்ளிரவு நேரம் வரை கண்டியில் பதற்றநிலை காணப்படும் சகல பிரதேசங்களுக்கும் நேரடியாகச் சென்று அங்குள்ள பாதுகாப்புத் தரப்பினருடன் பேசி, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்தினார்.