கொழும்பிலும் அமைதியான முறையில் ஜூம்ஆத் தொழுகை நடைபெற்றன.



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
டந்த ஒருவார காலமாக கண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலைமைகள் காரணமாக இந்த நாட்டு முஸ்லிம்கள் மிகவும் நொந்துபோய் ஒருவகையான அச்ச நிலையில் இருந்து வருகின்றனர். இதனை தவிர்ப்பதற்கு நாட்டில் பல பாகங்களிலும் பொலிஸ் இராணுவப் பாதுகாப்புக்கள் போடப்பட்டிருந்தன. குறிப்பாக பள்ளிவாசல்களுக்கு விஷேட பொலிஸ் பாதுகாப்புக்கள் போடப்பட்டிருக்கின்றது.

இதேவேளை தமது கண்டனங்களை தெரிவிப்பதற்கு இன்று கிழக்கில் வர்த்தக நிலையங்களை மூடி மாபெரும் கர்த்தால் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதனை கிழக்கில் மேற்கொள்ளாது தவிர்க்கப்பட்டிருக்கின்றது. கிழக்கின் ஜமிய்யதுல் உலமாசபை கிளையின் வேண்டுகோலின் அடிப்படையில் அது நிறுத்தப்பட்டது என்றாலும் இன்று அப்பகுதியில் வெள்ளிக்கிழமை என்ற படியால் கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததாக கிழக்கின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கொழும்பிலும் முஸ்லிம் மக்களிடத்திலும், முஸ்லிம் வர்த்தகர்கள் மத்தியிலும் ஒருவகையான அச்ச நிலைமைகள் கடந்த சில நாட்களாக இருந்து வந்தன. இவ்வாறான நிலையில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஜூம்ஆத் தொழுகையின்போது ஏதாவது அசம்பாவிதங்கள் இடம் பெறலாம் என்ற சந்தர்ப்பங்களும் முஸ்லிம்கள் இடத்தில் காணப்பட்டன. எனினும் கொழும்பில் புறக்கோட்டை உள்ளிட்ட அதிகமான இடங்களில் முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன பொலிஸ் பாதுகாப்புக்களும் பலப்படுத்தப்பட்டிருந்தன. அத்துடன் மக்கள் நடமாட்டங்களும் வழமையைவிட குறைவாகவே காணப்பட்டன.

கொழும்பு புறநகர்ப்பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகை எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் இடம் பெற்றதுடன் தொழுகைக்கு வந்தவர்கள் தொழுகையின் பின்னர் தேவையற்ற வகையில் அங்குமிங்கும் கூடிக் கதைக்காது தத்தமது வீடுகளுக்கும் அலுவலகங்களும் சென்றதைக் காண முடிந்தது.





குறிப்பாக கலவரம் அழிவுகள் ஏற்பட்ட திகனää தெல்தெனிய பள்ளிவாசல்களுக்கு இன்று அதிகபட்ச பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன. இதேவேளை நேற்றிரவு (இன்று அதிகாலை சுமார் 12.15 மணியளவில்) பேலியகொட இப்னு மஸ்ஊத் மத்ரஸாவை சிங்கள காடையர்குழு தாக்க வந்தபோது குறித்த மத்ரஸாவின் மாணவர்கள் அவதானமாக இருந்ததால் அவர்களை இவர்கள் துரத்தித்திச் சென்றபோது அவர்கள் ஓடியொழிந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடக் கண்டி உடதலவின்ன வத்தேகெதரயில் உள்ள முஸ்லிம் வீடு ஒன்றிற்கு இன்று அதிகாலை தீ வைத்துள்ள துர்ப்பாக்கிய நிலைமைகளும் முஸ்லிம்களை அச்சமடைய வைத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -