நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 154 வது பொலிஸ் வீரர்கள் தினம் 21.03.2018 அன்று அட்டன் பொலிஸ் தலைமையகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
அட்டன் பொலிஸ் நிலைய அத்தியட்சகர் ரவீந்திர அம்பேபிட்டிய தலைமையில் இந் நிகழ்வுகள் நடைபெற்றது.
யுத்தகாலத்தின்போது, பொலிஸ் சேவையின் போது உயிர் நீத்த பொலிசாருக்கு அஞ்சலி செலுத்தி அவர்களது சேவைகளும் நினைவு கூறப்பட்டது.
உயிர் நீத்த பொலிஸாரின் உறவுகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மலரஞ்சலி செலுத்தி உயிர்நீத்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நினைவு கூர்ந்தனர்.
இதில் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸாரின் உறவினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.




