நடைபெற்றுமுடிந்த தேர்தலில் காரைதீவுப்பிரதேசசபைக்குத் தெரிவான புதிய உறுப்பினர்களை வரவேற்க பிரதேசசபை நிருவாகம் தயாராகிவருகின்றது.
அதற்கென சபா மண்டபம் புதிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. முன்னர் 5 உறுப்பினர்களைக்கொண்டிருந்த காரைதீவுபிரதேசசபைக்கு இம்முறை 11உறுப்பினர்களுடன் தொங்குஉறுப்பினர் அடங்கலாக 12பேர் தெரிவாகியுள்ளனர்.
எனவே சபாமண்டபத்தில் 12உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
இதுதொடர்பில் பிரதேசபைச் செயலாளர் அருணாசலம் சுந்தரகுமார் கூறுகையில்:
புதிய தவிசாளர் பிரதிதவிசாளர் உறுப்பினர்களை வரவேற்க ஆவலாக உள்ளோம். முதற்கட்டமாக அவர்களுக்கான சபா மண்டபத்தை வடிவமைத்தள்ளோம்.
முன்னே மத்தியில் தவிளாருக்கான ஆசனமும் வலம் இடமாக செயலாளர் மற்றும் சுருக்கெழுத்தாளருக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் 11 உறுப்பினர்கள் அமரக்கூடியவாறு வட்டமேசை வடிவில் ஆசனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. என்றார்.