2. கறுப்புக்கொடிகள் பறக்கின்றன.
3. 300க்கும் மேற்பட்ட பொலிஸார்,
விசேட அதிரடிப்படையினர்
4. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கெமராக்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீக் அவர்கள் இன்று (03) சாய்ந்தமருதுவில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதனையிட்டே மேற்சொன்ன விடயங்கள் இடம்பெற்றுள்ளன.
நிலமை கவலையாகவுள்ளது. மாமனிதர் அஷ்ரஃப் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அந்தக் கட்சியின் தலைவராக ரவூப் ஹக்கீம் அவர்களை ‘அல்லாஹு அக்பர்’ கூறி எந்த மண் அவரை அங்கீகரித்து அழகு பார்த்ததோ அந்த மண்ணிலேயே இன்று அவருக்கு இந்த நிலைமை.
நாங்கள் உங்களிடம் கேட்டது எல்லாம் எங்களை நாங்கள் ஆள்வதற்கு ஓர் உள்ளூராட்சி மன்றத்தைப் பெற்றுத் தாருங்கள் என்ற எங்களுக்கு உரித்தான உரிமையை மட்டும்தானே, வேறு எதனை நாம் உங்களிடம் கேட்டோம்.
சரி, அதனை நீங்கள் பெற்றுத் தர விருப்பம் கொள்ளாவிட்டாலும் அதனைப் பெற்றுக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் உங்கள் கட்சியே தடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.
மேற்சொன்ன இரண்டு விடயங்களாலும்தான் இன்று சாய்ந்தமருதுவில் இந்த நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மிகக் கவலையடைகிறேன்.
எங்களால் விரும்பி அழைக்கும் விருந்தாளியாக மக்களுடன் மக்களாக, மக்களே உங்கள் பாதுகாவலராக (இறைவனை முதலில் கொண்டு) எங்கள் ஊருக்கு வரவேண்டிய நீங்கள் இன்று வேண்டா விருந்தாளியாக முன்கூட்டியதான மூன்று அடுக்குப் பாதுகாப்புடன் செல்கின்றீர்கள் என்பதனையறிந்து கவலை கொள்கிறேன். இருப்பினும் எவ்வித பிரச்சினைகளும் இடம்பெறா வகையில் உங்கள் கூட்டம் நடைபெற வேண்டும். உங்களுக்குரிய உரிமையை எவரும் தட்டிக்கழிக்க முடியாது
இதேவேளை, சாய்ந்தமருது மக்களும் ஜனநாயக ரீதியாக உங்களது எதிர்ப்பினை வன் செயல்களற்ற நிலையில் காட்டலாமே தவிர சர்வாதிகாரத் தோரணையில் எதனையும் செய்யக் கூடாது. மற்றவர்களின் அரசியல் உரிமைகளில் தலையிடுவது என்பது மாபெரிய குற்றச் செயல்.
மேலும், சாய்ந்தமருது மக்களே, உங்களது அரசியல் நிலைப்பாட்டிலிருந்து நீங்கள் தளர்ந்து விடக் கூடாது. தோடம்பழம் எமக்கு நிச்சயம் வெற்றியையும் அதன் பின்னர் மிகுந்த சக்தியையும் தரும் இன்ஷா அல்லாஹ்.
பத்ரு யுத்தத்தில் நபிகளார் கண்ட வெற்றிக்கும் உஹது யுத்தத்தில் அன்னார் கண்ட தோல்விக்கும் என்ன காரணங்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, நீங்கள் நிச்சயமாக உஹது யுத்த தோல்விக்கு காரணமானவர்களின் மனநிலை கொண்டவர்களாக இன்றி, பத்ரு வெற்றியைத் தந்தவர்களின் (ஒற்றுமை) மன நிலையை பற்றிப் பிடித்தவர்களாக இருப்பதற்கு இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக.
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.
