பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“உள்ளூராட்சி மன்ற தேர்தலை அடிப்படையாக வைத்து ஆட்சியை கவிழ்க்க முனையவில்லை. அத்துடன் யாருக்கும் நாம் ஆட்சியை வழிநடத்தி செல்ல முட்டுகொடுக்கவும் தயாராகவில்லை
நாட்டு மக்களின் முக்கிய பிரச்சினையை தீர்க்காமையே தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி பெறுவதற்கு காரணமாகும். எனினும் மக்கள் ஆணையை இன்னும் கூட அரசாங்கத்தினால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.
யுத்தத்தை நிறைவு செய்த மஹிந்த ராஜபக்சவை சிறையில் அடைக்காமைக்கு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆணை வழங்கவில்லை. மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமையே தோல்விக்கு காரணமாகும்.
அத்துடன் நாட்டில் இனவாதத்தை தூண்டியதாக இரா.சம்பந்தன் கூறினார். நாம் இனவாதத்தை தூண்டவில்லை. வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே இனவாதத்தை தூண்டி வருகின்றனர்.“ என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.