கந்தளாய் அல்-தாரிக் கனிஸ்ட வித்தியாலயத்தின் அவல நிலை



எப்.முபாரக்- 
ந்தளாய் அல்-தாரிக் கனிஸ்ட வித்தியாலயத்தின் அவல நிலையினை அரச அதிகாரிகளும் அரசியல் தலைமைகளும் கண்டுகொள்ளமாலிருப்பது பெரும் கவலையளிக்கின்றது என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் அல்-தாரிக் கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் ஆரம்பப் பிரிவு மாணவச் செல்வங்கள் தற்காலிகக் கொட்டில்களில் மண் தரையிலும் பாய்களைப் போட்டு உட்கார்ந்தும் தமது கல்வியினைக் கற்று வருகின்றனர்.
இந்நிலையினைப் பொறுப்பு வாய்ந்த எவரும் கண்டுகொள்ளாமலிருக்கின்றனர். பெற்றார்கள் மற்றும் நலன் விரும்பிகளினால் தற்காலிகக் கொட்டில்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த வகுப்பறைகள் சில காலம் நிலத்திற்கு சீமெந்து இடப்படாமல் மண்தரையாக இருந்தது. அவ்வகுப்றைகளுக்கு தளபாடங்களும் இல்லாமல் இருந்த நிலையில் சின்னஞ்சிறு ஆரம்பப் பிரிவு மாணவர்கள் மண் தரையிலும் பாய்களைப் போட்டு உட்கார்ந்தும் சில காலம் கல்வி கற்று வந்தனர். 
அவ்வகுப்பறைகளின் நிலத்திற்கு சீமெந்தை மாத்திரமாவது இட்டுச் சரிசெய்து தருமாறும் அரச அதிகாரிகள் மற்றும் அரசியற் தலைமைகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்தும் அவைகூட நிவர்த்தி செய்துதரப்படவில்லை. அதனால் சனிக்கிழமை (17) பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புடன் வகுப்பறைகளின் நிலத்திற்கான சீமெந்து இடும் வேலைகள் செய்துமுடிக்கப்பட்டன. அச்சந்தர்ப்பத்தில் மக்கள் தமது கவலையினை மனக் குமுரலுடன் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அவர்கள் தொடர்ந்து கூறுகையில் 2015-01-01 ஆம் திகதி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்திற்கமைய இப்பிரதேசத்தில் சுமார் 950 பாடசாலை மாணவர்களுடன் இயங்கிவந்த அல்-தாரிக் மகா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு தனியாகப் பிரிக்கப்பட்டு அல்-தாரிக் கனிஸ்ட வித்தியாலயமாக ஆரம்பிக்கப்பட்டது.

அப்போது இதற்கென நிரந்தரக் கட்டிடம் இல்லாமையினால் இவ்ஆரம்பப் பிரவு தற்காலிக்க கொட்டிலில் ஆரம்மிக்கப்பட்டது. பாடசாலை ஆரம்பித்துச் சிலகாலம் செல்லும்போது மாணவர்களின் தொகையும் அதிகரித்து வந்தது. அப்போது இப்பாடசாலைக்கென நிரத்தரக் கட்டிடத்தின் தேவை அத்தியவசிமானதொன்றாக மாறியது. இதனைப் பெற்றுக் கொள்வதற்காக அதிபர், ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் கல்வி அதிகாரிகளிடமும் மற்றும் அரசியல்வாதிகளிடமும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படதற்கமைவாக தனவந்தர் ஒருவரினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட காணியில் 2016 ஆம் ஆண்டு அரசினால் 20 X 50 அளவினைக் கொண்ட வகுப்பறைக் கட்டிடம் அமைத்துத்தரப்பட்டது.

இது மாணவர் தொகைக்குப் போதுமானதாக இருக்கவில்லை.

இதனால் ஏனைய மாணவர்கள் மீண்டும் தற்காலிக கொட்டில்களைக் கொண்ட வகுப்பறைகளில் கல்வி கற்கவேண்டிய நிலை தொடர்ந்தது. மாணவர்கள் மீண்டும் மண்தரையில் கல்வி கற்கவேண்டிய துற்பாக்கிய நிலையும் தோன்றியது. இது விடயமாக கல்வித் திணைக்களம் மற்றும் அரசியற் தலைமைகளிடம் தெரியப்படுத்தி புதியதொரு வகுப்பறைக் கட்டிடத்தினைப் பெற்றக்கொள்வதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் எதுவும் கைகூடவில்லை.

முயற்சிகள் கைகூடாத நிலையில் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் ஒன்றினைந்து மக்களின் ஒத்துழைப்பின் மூலம் பாடசாலைக்கென மீண்டுமொரு 80 x 19 அளவிலான தற்காலிகக் கொட்டில்களை அமைத்தனர். விவசாயிகளை அதிகமாகக் கொண்ட இப்பிரதேச மக்களினால் தற்காலிக வகுப்பறைக்கான கொட்டிலை அமைக்க முடிந்தபோதிலும் நிலத்திற்கென சீமெந்து இடுவதற்கு போதுமான உதவி கிடைக்கவில்லை.தளபாடம் இல்லாவிட்டாலும் நிலத்தில் உட்கார்ந்து சரி எமது குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தாலும் தினமும் பாடசாலை சென்றுவரும் மாணவர்கள் நிலத்தில் உட்கார்ந்து கல்வி கற்பதினால் தமது வெள்ளை உடைகள் மிகவும் அழுக்கடைந்த நிலையில் வீடுவந்து சேர்வதனைக் கண்ட பெற்றார்களின் மனம் மிகவும் வேதனைப்பட்டது. இவ்வருடத்தின்

முதலாம் தரத்திற்கான ஆரம்ப வைபவம் கூட மாணவர்கள் மண்தரையினைக் கொண்ட வகுப்பறையிலேயே கொண்டாடினர். .

எவரையும் எதிர்பார்க்காத இவ்விவசாய பெற்றோர்கள் மிகுந்த கஸ்டத்துடன் அவர்களால் அமைக்கப்பட்ட தற்காலிகக் கொட்டில்களைக் கொண்ட வகுப்பறைகளுக்கு சனிக்கிழமை(17) சீமெந்து இட்டு செப்பனிட்டனர்.

சுமார் 224 மாணவர்களையும் 8 வகுப்பறைகளையும் கொண்டு இயங்கிவரும் இப்பாடசாலைக்கு ஆறு ஆசிரியர்கள் மட்டுமே கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட வருகின்றனர். இன்னும் இப்பாடசாலைக்கு 3 ஆசிரியர்கள் தேவையான நிலை காணப்படுகின்றது. தரம் ஒன்று மாணவர்களின் கற்பித்தல் நடவடிக்கையினை மேற்கொள் ஆசிரியர் ஒருவர் இல்லாத நிலையில் இப்பாடசாலை இயங்கிவருகின்றது

கல்விக்காக அரசினால் பல கோடிக்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில் மண் தரையில் உட்கார்ந்து கல்வி கற்றுவரும் நிலை ஏன் தொடர்கிறது. இது பொருப்புக் கூறுவது யார்? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். பௌதிக மற்றும் ஆளனிக் குறைபாட்டுடன் இயங்கிவரும் இப்பாடசாலையின் குறைகளை நிவர்த்திக்க உரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆரம்பக் கல்வி பாடசாலைக் கல்வியின் அடித்தளம். இதனை முறையாக எமது குழந்தைகள் பெற்றக் கொள்ள சகலரும் ஒத்துழைக்க வேண்டும். இது முறையாக வழங்கப்படாவிட்டால் எமது குழந்தைகளின் எதிர்காலம் கேல்விக் குறியாகிவடும் என மிக்க கவலையுடன் அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

43 பாடசாலைகளைக் கொண்ட கந்தளாய் கல்வி வலயத்தில் 33 சிங்கள மொழி மூலப் பாடசாலைகளும் 2 தமிழ் பாடசாலையும் 7 முஸ்லிம் பாடசாலைகளும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -