பதுளை, மஹியாங்கனை பிரதான வீதியில் பயணம் செய்து கொண்டிருந்த கார் ஒன்று 26.02.2018 அன்று காலை 7.20 மணியளவில் மாபாகட வெவ, 17 ஆம் கட்டைக்கு அருகில் வியானா நீரோடையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
காரில் பயணம் செய்த நால்வரில் மூவர் காப்பாற்றப்பட்டிருப்பதுன், ஒருவரை காணவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆசிரியை ஒருவர், ஆசிரியர்கள் இருவர் மற்றும் வங்கி அதிகாரியொருவர் கார் வாகனத்தில் பண்டாரவளையிலிருந்து மஹியாங்கனை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதேசவாசிகளும், மஹியாங்கனை பொலிஸ் அதிகாரிகளும் காணமல் போன நபரை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் விபத்தில் சிறு காயமடைந்த ஆசிரியை மஹியாங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியாங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.