மட்டக்களப்பு மாவட்ட ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கரசின் சீட்டை நீங்கள் விடப்போகிறீர்களா..?
இல்லை மெளலானா வென்றடுத்த ஏறாவூர் நகரசபையின் ஆட்சியை அமைக்க இடமளிக்கப் போகிறீர்களா..?
நாங்கள் வென்றும் ஏன் உங்களிடம் பிச்சை கேட்க்க வேண்டும். ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது கிழக்கு மாகாணத்தில், ஆனால் ஏன் நாங்கள் கொழும்பில் வந்து தவம் கிடந்து உங்களுடன் பேச வேண்டியதன் காரனம்தான் என்ன.
அத்துடன் உங்கள் மச்சான் சபீக் ரஜாப்தீன் ஏற்கனவே சொல்லிவிட்டார் கிழக்கானை முழங்காலில் முட்டி போடவைப்போம் என்று??
கடந்த தேர்தலுக்கு கண்துடைப்பு போல் அவரை கழட்டிவிட்டேன் என்று கிழக்கு மாகாணத்தானோடு பொய் சொல்லி பின்னர் சபீக் ரஜாப்தீன் உங்கள் உயர்பீடம் கூடும்போது முன் வரிசையில் அமர வைத்து கிழக்கானை நீங்களும் சேர்த்து முட்டாளாகக் காட்டிய வித்தைகளை இனியும் எங்களுக்குக் காட்டவேண்டாம்.
தலைவா வென்றவனுக்கு சேமன் கொடுத்து அலங்கரிக்க வேண்டும் அப்போதுதான் மக்கள் உங்களுக்கு நன்கு மரியாதை தருவார்கள். எங்கள் தலைவர் மெளலானாக்கு அரை மந்திரியும் தேவையில்லை முழு மந்திரியிலும் தேவையில்லை.
அவரை நையாண்டி செய்ய நினைத்தால் உங்கள் மட்டக்களப்பு எம்பியும் இல்லாமல் போய் ஏறாவூர் பக்கமும் கட்சியின் செயற்பாடு ஒழிந்து போகும் நிலை உருவாகும். அந்நிலையை இத்தேர்தல் தெட்ட தெழி\வாகக் காட்டியிருக்கிறது.
ஏழு கோடி ரூபாய் செலவு செய்து வெறும் மூன்று வட்டாரங்களே வென்றிருக்கும் உங்கள் பிரதித் தலைவரின் நிலை எங்கே. வெறும் ஏழு இலட்சமே மக்களால் செலவு செய்யப்பட்டு வெற்றியீட்டிய மெளலானாவின் நிலையெங்கே என்பதனை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது நீங்கள் எங்களூரை இரண்டாக பிரித்து விட்டீர்கள்
உண்மையில் சொல்லப் போனால் நயீமுள்ளாஹ் இறைவனுக்கு பயந்தவர் நன்றாகப்புரிந்து பேசுகிறார்.. நீங்கள் மக்களுக்கு முன் நாடகமாடுகிறீர்கள். இன்னும் பொறுக்க முடியாது அவசரமாக முடிவெடுங்கள். இப்ப முடித்து பின்னர் அடுத்த கடிதம் அனுப்புவேன் நன்றி.
கட்டாரில் இருந்து அப்துல் ரபீக்.