நாளை வேல்சாமிதலைமையில் திருக்கேதீஸ்வர பாதயாத்திரை ஆரம்பம்!


காரைதீவு நிருபர் சகா-


ந்துக்களின் புனித சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு உலகசைவத்திருச்சபை வருடாந்தம் நடாத்திவரும் திருக்கேதீஸ்வர பாதயாத்திரை நாளை(7) யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமாகின்றது.

காரைதீவைச்சேர்ந்த கதிர்காம பாதயாத்திரைக்குழுத்தலைவர் வேல்சாமி தலைமையில் இப்பாதயாத்திரை நடைபெறும்.

நாளை புதன்கிழமை செல்வச்சந்நதி முருகன் ஆலயத்திலிருந்து விசேட பூஜையுடன் ஆரம்பிக்கும் இப்பாதயாத்திரை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சென்றடையும். வியாழக்கிழமை காலை நல்லூரிலிருந்து திருக்கேதீஸ்வரம் நோக்கி பாதயாத்திரை புறப்படும்.
யாழ்ப்பாணத்திலிருந்து 7தினங்கள் பாதயாத்திரையை மேற்கொண்டு செம்மணி நாவற்குழி பூநகரி முழங்காவில் சங்குப்பிட்டி ஆத்திமோட்டை பாப்பாமோட்டை பாதை வழியாக சுமார் 150கிலோமீற்றர் கடந்துசெல்லவுள்ளனர்.

2018.02.13ந் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு திருக்கேதீஸ்வர பாதயாத்திரை நாளை 2018.02.07ந் திகதி காலை தொண்டமானாறு செல்வ சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமபாதயாத்திரை வேல்சாமி தலைமையில் ஆரம்பமாக உள்ளது.

உலகசைவத்திருச்சபையின் இலங்கைக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ கதிர் குமாரசாமி சுமுகலிங்கம் ஜயாவின் எற்பாட்டில் நடைபெற்றுவரும் இப்பாதயாத்திரை இம்முறை 3வது வருடமாக நடாத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாதயாத்திரை வேல்சாமி வருடாந்தம் கதிர்காமம் வெருகல் மண்டுர் திருக்கேதீஸ்வரம் ஆகிய திருத்தலங்களுக்கு பாதயாத்திரை சென்றுவருவது தெரிந்ததே






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -