தேசியப்பட்டியல் பாராளுன்ற உறுப்பினராக ஏ.எல்.எம். நசீர் சத்தியப்பிரமாணம்




ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீர் இன்று (06) பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் பதவி எம்.எச்.எம். சல்மான் என்பவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் தனது பதவியை இராஜினாமா செய்த பின்னர், அந்த வெற்றிடத்துக்கு ஏ.எல்.எம். நசீர் நியமிக்கப்பட்டார்.

புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற ஏ.எல்.எம். நசீர் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக இருந்து, பின்னர் மாகாணசபை உறுப்பினராக தெரிவானார். அதன்பின்னர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக பதவிவகித்தார்.

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் தருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரமே இந்தப் பதவி ஏ.எல்.எம். நசீருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -