அட்டன் – டிக்கோயா நகர சபைத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஐ.தே.க. வின் “யானை” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். ராம், வேட்பாளர் டாக்டர் அழகமுத்து நந்தகுமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டம் நேற்று முன்தினம் அட்டன் ஸ்ரீ கிருஷ்ணபவான் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் அமைச்சர் பி. திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியதாஸ ஆகியோர் உரையாற்றுவதையும், அம்பகமுவ பிரதேச சபைக்கு “வாழைப்பழ சீப்பு” சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர்கள் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இணைந்து கொண்டதையும், கூட்டத்தில் கலந்து கொண்ட நகர வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களையும் படங்களில் காணலாம். ( படப்பிடிப்பு: பானா. தங்கம் )