களுப்பானை தோட்டத்தில் மக்களுடன் மல்லுக்கட்டியவர்கள் அல்ல நாங்கள்- திலகர் எ.ம்பி

கேகாலை மாவட்டம் , களுப்பான தோட்டத்தில் மண்சரிவு அபாயம் நேர்ந்தபோது அங்கு வந்தவர்கள் ஆபத்தில் இருந்த மக்களுடன் சண்டைக்கு மல்லுக்கட்டிக்கொண்டு நின்றனர். ஆனால், இன்று வாக்கு கேட்டு வருகின்றனர். அன்று அந்த மக்களுக்கு ஆறுதல் வார்த்தைச் சொல்ல வந்த நாங்கள் இன்று வீடுகளைக் கட்டிக்கொடுக்கின்றோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டம் புலத்கோபிட்டிய பிரதேச சபைக்கு போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாரளர்களை ஆதரித்து களுப்பான தோட்டத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மலையக மக்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சென்று சேவை செய்வதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் இலக்கு இந்த தேர்தலை நாங்கள் மலையக மக்கள் அனைவரினதும் அரசியல் பிரதிநிதித்துவத்தினை உறுதிசெய்யும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதனால்தான் நுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் களப்பபணிகள் இருக்கின்றபோது எமது கூட்டணி உறுப்பினர்கள் , அமைச்சர்கள் மலைய மாவட்டங்கள் அனைத்திற்கும் சென்று பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். 

இந்த களுப்பான தோட்டத்தில் அன்று மண்சரிவு வந்தபோது பார்வையிட வந்த இ.தொ.கா குழுவினர் ஆபத்தில் இருந்த இந்த மக்களுடன மல்லுக்கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று அந்த மக்களிடம் வாக்கு வாங்குவதற்கு ஓடி வந்து மண்டியிடுகின்றார்கள். ஆனால், நாம் அந்த மக்களுக்கு இன்று நூற்றுக்கணக்கான வீடுகளைப் பெற்றுக்கொடுத்துள்ளோம். நாம் கேட்காமலேயே அந்த மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர்.கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கடந்த காலத்தை விட அதிகளவான ஆசனங்களை தமிழ் முற்போக்கு கூட்டணி வெல்வது உறுதி என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -