உள்ளுராட்சி சபைத் தேர்தல்
கல்முனை மாநகரசபைத் தேர்தல் -10.02.2018
சனிக்கிழமை மு.ப.7.00 மணிதொடக்கம்
பி.ப.4.00 மணி வரை வாக்களிப்பு நடைபெறும்
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
சாய்ந்தமருது மக்களும் கல்முனை மாநகர சபைத் தேர்தலும்,உள்ராளுட்சி சபை பெறுவதும்.
கல்முனை மாநகர சபை தேர்தலை வெற்றி பெறுவதற்கு சாய்ந்தமருது- மாளிகைக் காடு ஜூம்மா பள்ளி வாசல் மரைக்காய சபையின் ஒருசிலர் சென்ற வருடம் சாய்ந்தமருது ஜூம்மாப்பள்ளி வாசலால் உள்ளுராட்சி சபையை பெறுவதற்கு மக்கள் மத்தியில் உள் மனதில் மயில் சுயேட்சைக் குழுவென்றும், வெளியில் மக்கள் மத்தியில் உள்ளுராட்சி சபையை நாங்கள் பெற்றுத்தருவதற்கு முயற்சி எடுக்கின்றோம் என வேசமும் எடுத்து சாய்ந்தமருது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை உடைத்து மயிலை சாய்ந்தமருதில் நினைநிறுத்த வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள்.
சாய்ந்தமருதுக்கு உள்@ராட்சி சபை பெறுவதில் ஏற்பட்ட குளருபடிகள்
சாய்ந்தமருது ஒரு சில மரைக்காயமார்களும் இவர்களுடன் இணைந்து செயல்படுகின்ற மறுமலர்ச்சி இயக்கம், ஏனைய கட்சி சார்புடையவர்களும் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி கோரிக்கை விடுகின்ற ஒரு சில மரைக்காயசபையினருடைய நடவடிக்கை சம்மந்தமாக பின்வரும் விடயங்களை உங்கள் முன் தருகின்றோம். அதாவது சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபையை பெறுகின்ற விடயத்தில் சாய்ந்தமருது மக்கள் எல்லோரும் மாற்றுக் கருத்துடையவர்கள் அல்லர். அதனை பெறுகின்ற விடயத்தில் முயற்சி எடுத்தவர்களின் பின்னடைவுதான் தற்போது அதை பெறமுடியாமல் சாய்ந்தமருது மக்களை பிழையான வழியில் ஊர் என்றும், பள்ளி வாசல் என்றும்,சுயேட்சைக் குழுவென்றும் மக்களை திசை திருப்பினார்கள். ஆனால் சாய்ந்தமருது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை தொட்டு விட்டு விட்டார்கள். இதற்கு காரணம் உள் மனதில் சில மரைக்காயர்மார்களுக்கு வேறு அரசியல் பின்னணி இருந்துள்ளது. இது பிரகடணத்திற்கு முன்பும், பின்பும், அறிந்த விடயமாகும். கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஆளுகின்றது. சாய்ந்தமருது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவிடம் மாநகரசபை உறுப்பினர்களிடமும் ஆலோசனைகளை பெற்றிருந்தால் கூட்டங்களுக்கு அழைத்திருந்தால் உள்ளுராட்சி சபையை பெற்றிருக்கலாம். கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறாமல் விட்டதன் காரணமாக உள்@ராட்சி சபையை பெறமுடியாமல் போனதற்கு பிரதான காரணமாகும்.
அன்பார்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி போராளிகளே, வாக்காளப் பெருமக்களே!
சாய்ந்தமருது ஜூம்மாப் பள்ளி வாசல் மரைக்காயர் சபையை பற்றி நீங்கள் அறிந்திராத விடயங்களை உங்கள் முன் தருகின்றோம். மரைக்காய சபையில் 99 பேர் உள்ளனர். அதில் குடிவழி 62 பேர், 28 பேர் முகல்லாப் பள்ளி வாசலில் உள்ளவர்கள், 06 பேர் புத்தி ஜீவிகள், 03 பேர் உலமாக்கள் இவர்களுடைய பதவிக்காலம் மூன்று வருடங்கள் பதவிக்காலம் முடிவு 2017 பெப்ரவரி மாதமாகும். சாய்ந்தமருதில் 14 பள்ளி வாசல்கள் அதன் கீழ் இயங்குகின்றன.
இவை மட்டும் அல்ல இன்னும், இன்னும், இவர்களுடைய குளருபடிகள்
சாய்ந்தமருது மாளிகைக்காடு மரைக்காய சபையின் நிருவாகத்தின் கீழ் இன்னும் 14 பள்ளிவாசல்கள் இயங்குகின்றன. இதில் 2017 பெப்ரவரி 27ம் திகதியுடன் பரிபாலன சபையினரின் நிர்வாகக்காலம் முடிவடைந்துவிட்டது. ஆனால் 14 பள்ளிவாசலுக்கும்நிர்வாகம் அமைக்கின்ற பொறுப்பு அவர்களிடம் உண்டு. ஆனால் 5 பள்ளிவாசலுக்குரிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றன. பின் 5 பள்ளி வாசலுக்கு இவர்கள் நிர்வாகம் தெரிவு செய்ய சென்றபோது அதிகமான மரைக்காயர்மார்களை அழைத்துச் சென்று அவர்கள் விரும்பிய மரைக்காயர்மார்களை தெரிவு செய்கின்றபோது குழப்பம் ஏற்பட்டு இறுதியாக குழப்பத்திலேயே முடிந்தன.
குழப்பம் ஏற்பட்டதனால் நிர்வாகம் தெரிவு செய்யப்படாத பள்ளிவாசல்கள்
1. மாளிகைக்காடு மேற்கு - மஜ்ஜிதுல் ஸாலிஹீன்
2. 1ம் பிரிவில் இருக்கின்ற - அல்பத்தாஹ்
3. 7ம் பிரிவில் இருக்கின்ற - மஸ்ஜிதுல் ஹுதா
4. 11ம் பிரிவில் இருக்கின்ற - அல்சபா (சின்னப்பள்ளி)
5. 15ம் பிரிவில் இருக்கின்ற - மஸ்ஜிதுல் தக்வா
இந்தக் குழப்பத்திற்கு காரணம் ஜும்மாப் பள்ளிவாசலை நிர்வகித்துக் கொண்டிருக்கின்ற தலைவரும், செயலாளரும். அவர்கள் விரும்பியவர்களை மரைக்காய சபைக்கு தெரிவு செய்யவேண்டும் என திட்டங்களை தீட்டியதால் தோல்வியை தழுவினார்கள். சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்மாப் பள்ளிவாசல் ஒரு சில மரைக்காயமார்கள் குடி வழி என்ற போர்வையில் மரைக்காயமார்கள் தன்னுடைய குடும்பத்தை சார்ந்தவர்களை (உ+ம்) வாப்பா மகனையும், மாமா மருமகனையும் நியமித்து ஆயுள்கால மரைக்காயமார்களாக உள்ளார்கள். சில வெற்றிடங்களுக்கு (உ + ம்) டொக்டர் ஜெமீல் தன்னுடைய மரைக்காய பதவியை இராஜினாமா செய்ததற்காக அவருக்கு பதிலீடாக தலைவர் வை.எம்..ஹனீபா அவருடைய சகோதரியின் மகன் அஜ்வத்தை நியமித்தார். (அவர் மரைக்காய சபைக் கூட்டத்திற்கோ வருவதில்லை) இதுபோன்றுதான் தலைவர் வை.எம்.ஹனீபா அவருடைய மகன் நௌபரை சுயேட்சைக் குழு தலைவராகவும், தேசியப்பட்டியல் முதல்வராகவும் நியமித்துள்ளார்.
மருதூரில் 8500 குடும்பங்களின் தலைவர்கள் இருந்தும் அதில் குறைந்தது 1000 பேராவது மரைக்காய சபைக்கு தகுதியுடையவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுடைய யாப்பின் பிரகாரம் 40 வயதிற்கு மேல் தெரிவு செய்யப்படுகின்ற மரைக்காயர்மார்கள் அந்த அந்த குடும்பங்களின் உரியவர்களே மீண்டும் மீண்டும் தெரிவு செய்யப் படுவதினால் ஏனையவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தலைவர் வை.எம்..ஹனீபா ஒரு சில மரைக்காயமார்களைக் கொண்டு மேல் உள்ள விடயங்களை செய்துள்ளனர். கீழ் வரும் விடயங்களிலும் அவருடைய குளருபடியான செயல்பாடுகளும் உள்ள.
கடந்த காலங்களில் ஜும்மாப் பள்ளிவாசலில் தேவைக்கு அதிகமாக செலவினங்களை ஏற்படுத்திய ஒரு சில மரைக்காயமார்கள்
ஒரு சில மரைக்காய சபையினர் (உ +ம்) சம்சுதீன் மௌலவியுடனும், அவரைச் சார்ந்த குழுவினருடனும் 6 வருடங்கள் வக்பு வோட் ஊடாக வழக்காடியும், றைபுனல் ஊடாக 2 வருடங்களும் வழக்காடிய போக்கு வரத்துச் செலவு 15 இலட்சத்திற்கு மேல் செலவு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து சம்சுதீன் மௌலவி பள்ளிவாசலில் குர்ஆன் மத்திரிசாவில் கடமையாற்றியபோது அவருக்கு அடித்து வழக்காடி லேபர்கோட் ஊடாக தண்டப்பணமாக 1, 1/4 இலட்சம் ரூபா பள்ளிவாசலால் சம்சுதீன் மௌலவிக்கு கொடுக்கப்பட்டது. இதன் பிரகாரம் வழக்காடிய செலவு (36 தவணைகள்) கிட்டத்தட்ட 5 இலட்சம் ரூபாவாகும். இப்படியான சம்பவங்கள் நடப்பதற்கு பிழையான காரணம் தலைவரும் அவருடைய மரைக்காய கைக்கூலியாட்களும். இந்தப் பணம் யாருடையது சாய்ந்தமருது வாழ் மக்களுடையது. இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்து உங்களுடைய பணத்தை உங்களிடம் தெரிவித்து செலவழித்தார்களா, மறுமையில் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். இப்படியான தலைவர்தானா சாய்ந்தமருதுக்கு உள்@ராட்சி சபையை பெற்றுக்கொடுப்பது.
சம்சுதீன் மௌலவி குழுவினர் வழக்காடிய நோக்கத்தை தருகின்றோம்
அரச சொத்துக்களை சூறையாடி தம் வசப்படுத்தியவர்கள் (உ+ம்) மின்சாரம்,தண்ணீர்; களவு எடுத்தவர்கள். நீதி
மன்றத்தில் தண்டப்பணம் செலுத்தியவர்கள், பிரதேச செயலகத்தில் கடமை புரியும் ஒரு சிலரும், சாய்ந்தமருது
பல நோக்கு கூட்டுறவு சங்கத்தை மூடுவதற்கு காரணமாக இருந்தவர்களும் இவர்கள்தான் வழக்காடி ஏற்கனவே ஜும்மாப்பள்ளிவாசல் பணம் 15 இலட்சம் செலவழித்தவர்கள். இவர்கள்தான் ஒரு சில கைபொம்மை மரைக்காயமார்களை வைத்துக்கொண்டு செயல்பட்டவர்தான் இவர்களுடைய அசிங்கமான விடயங்கள் அதிகமாக உள்ளன. இவர்கள்தான பள்ளிவாசலும், ஊர் என்றும் கதைப்பவர்கள்.
உள்ளுராட்சி சபை பெறுவதற்கு சென்ற ஒரு சில மரைக்காய சபையினரும் முஸ்லிம் காங்கிரஸை தவிர்ந்த ஏனையகட்சிக்காரர்களும்
உள்ளுராட்சி சபை பெறுவதற்கு பல இடங்களுக்கு ஜனாதிபதியையும், அமைச்சர்மார்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் 42 தரம் சந்திக்கச் சென்றுள்ளோம் என்று மரைக்காயர் சபையினர் சொல்லுகின்றார்கள். ஆனால் குறைந்தது 15 தரம் சந்தித்து இருப்பார்கள். இவர்களை சந்திக்க சென்றவர்கள் யார் என்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் தெரிந்திருக்க வேண்டும். இவர்கள்தான் ஊருக்கு வாக்கும் பள்ளிக்கு வாக்கும் என்று எமதூரில் நாடகம் ஆடுகின்றவர்கள். மயிலை மறைமுகமாக ஆதரித்து சாய்ந்தமருது மக்களை திசை திருப்ப நினைக்கும் 10 அல்லது 15 சுயநலமுடைய மரைக்காயமார்கள். ஏனைய மரைக்காயமார்கள் எங்கே? ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை சாய்ந்தமருதூரில் அழிக்க வேண்டும் என்று நினைக்கின்ற சுயநல மரைக்காயர்மார்களும், ஏனைய கட்சிக்காரர்களும் இவர்கள்தான் உள்ளுராட்சி சபையை பெறுவதற்கு
சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளச்சேனை, கொழும்பு சென்றவர்கள். சென்றவர்களில் தலைவர் வை.எம்.ஹனீபா, மஜீட், றோஸான் பள்ளிவாசல் செயலாளர் (விமல் வீரவம்சாவின் கட்சி) உப-தலைவர் காசிம் மௌலவி இஸ்மாயில் மாஸ்டர் ஒரு சில மரைக்காயர்மார்கள் இவர்கள் எல்லாம் ரான்சர் எடுப்பதற்கும் ரான்ஸரை கென்சல் பண்னுவதற்கும், தொழில் எடுப்பதற்கும் சென்றவர்கள், தன்னுடைய சொந்த வேலைகளை பார்த்தித்திருந்தவர்கள்,நீண்டகாலம் மரைக்காயராக தொடர்ந்து இருப்பதற்கு அமைச்சரின் உதவி தேடுவதற்காக சென்றவர்கள்.
சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை வழங்குவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், சட்ட முதுமானியும், தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு, நகர அபிவருத்தி அமைச்சருமான கௌரவ.அல்-ஹாஜ்.றவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், சட்டத்தரணியுமான கௌரவ அல்-ஹாஜ்எச்.எம்.எம்..ஹரீஸ் எடுத்த நடவடிக்கைகள்.
இருவர்களும் ஒன்றினைந்து, ஜனாதிபதி, பிரதமர், உள்நாட்டு மாகாணசபை அமைச்சர் ஊடாக பெறுவதற்கு ஆயத்தமாக இருந்த நிலையில், நிந்தவூரில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மிக விரைவில் வழங்குவதற்கு உறுதியளித்திருந்த நிலையிலும்,பிரதி அமைச்சர் ஹரீஸ் சாய்ந்தமருது அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் அந்த விடயத்தை கூறியிருந்தும் அடுத்தநாள், அடுத்தநாள் பத்திரிகைகளில் உள்@ர் அரசியல்வாதிகள்
ஜெமீல்,சிராஸ் மீராசாஹிபு,ஏனைய கட்சிக்காரர்களும் பத்திரிகை ஊடாக,,பேஸ்புக் ஊடாக நாங்கள் கொடுக்கின்றோம் என்று அறிக்கைகள் விட்ட நிலையிலும் சாய்ந்தமருது, கல்முனைக்குடி பேஸ்புக் மன்னர்களுடைய விளையாட்டின் மூலமாகத்தான் கல்முனைக்குடியைச் சேர்ந்த மக்கள் அரசியல்வாதிகளை தேடி படையெடுத்தனர். இதன் காரணமாகத்தான் அரசியல்வாதிகளுக்கு தலையிடி உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்துதான் நான்காக பிரிக்கப்பட வேண்டும் என்ற முடிவு முன் வைக்கப்பட்டது.
அமைதியாக இருந்து இந்த விடயத்தை கையாண்டு இருந்தால் நிச்சயமாக சாய்ந்தமருதுக்கான உள்@ராட்சி சபையை பெற்றிருக்கலாம் என்பதை சாய்ந்தமருது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்தியகுழு நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் முஸ்லிம் காங்கிரஸினுடைய சாய்ந்தமருது மாநகரசபை உறுப்பினர்களும், கட்சியின் மத்திய குழுவும் இந்த ஊரில் இருந்து இயங்குகின்றது என்று தெரிந்தும், சாய்ந்தமருது மரைக்காயமார்களும் கேட்கின்றோம் என கூறிக்கொண்டிருந்தனர். இந்த விடயத்தை இந்த அளவுக்கு பத்திரிகைகளிலும், பேஸ்புக்கிலும் அறிந்து கொண்டோம். இந்த விடயங்களை கையாளக்கூடியவர்கள் நாங்கள்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள். சாய்ந்தமருது பிரகடணங்கள் எல்லாம் நாங்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். இவர்களோடு சேர்ந்து உள்ளுராட்சி சபையைப் பெறவேண்டும் என போராடி கறுத்தாள்களையும், பொம்மை எரிப்புக்களையும் செய்தவர்கள் எங்கே? ஒருசில மரைக்காயமார்களினால் சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது. இந்த நியமனம் அரசியல் சாயம் பூசிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நம்பிக்கைக்கு
உரியவர்கள். இதனை அறிந்த இவர்களோடு உள்@ராட்சி சபை வேண்டும் எனப் போராடிய சில மரைக்காயர்மார்களும்,இளைஞர்களும், இயக்கங்களும்,கழகங்களும் விலகி தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் சேர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் பின்புதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.
அன்பார்ந்த ஐக்கிய தேசியக் கட்சி வாக்காளப் பெருமக்களே!
ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பங்காளிக் கட்சியாக ஆட்சி செய்வதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின
வேண்டுகோளுக்கிணங்க உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுங்கள், போட்டியிட்டால் அகில இலங்கை ரீதியில் அதிகமான ஆசனங்களை பெறலாம் என்ற சிந்தனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகின்றது. எனவே ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களாகிய நீங்கள் எமது கல்முனை மாநகர சபையை அபிவிருத்தி செய்வதற்கு உங்களுடைய பொன்னான வாக்குகளை யானைச் சின்னத்திற்கு புள்ளடியிட்டு யானையை வெற்றிபெறச் செய்யுமாறு அன்பாக வேண்டுகின்றோம்.
எனவே நாங்கள் கட்சித் தலைவருடனும், பிரதி அமைச்சர் ஹரீசுடனும் இந்த விடயத்தை பேசியிருக்கின்றோம். இந்த உள்ளுராட்சிசபையை கல்முனை மாநகரசபை பாதிப்படையாமல் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபை பெறுவதற்கு மத்திய குழுவாகிய நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.
சாய்ந்தமருது மக்கள் அதி கூடிய வாக்குகளை இந்த தேர்தலில் யானைச் சின்னத்திற்கு அளித்தால் கல்முனை மாநகரசபையின் மேயர் பதவி சாய்ந்தமருதுக்கு கிடைக்கும் என திடகாத்திரமாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
உள்ளுராட்சி சபையை பெறுவதற்கு மறியல் போராட்டமும் சாய்ந்தமருது பிரகடணமும்.
ஒரு சில மரைக்காயமார்களும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் இவர்களுடன் சேர்ந்தவர்கள், மற்றும் ஏனைய கட்சிக்காரர்கள் தான் இரண்டு, மூன்று வருடங்களுக்கு மேலாக உள்ளுராட்சி சபை வேண்டுமென முயற்சி செய்தவர்கள் இவர்கள்தான் 2017 ல் ஹர்தால்களையும், பொம்மை எரிப்புக்களையும், வீதி மறியல் போராட்டமும், ஊருக்குள் எந்த அரசியல்வாதியும் நுழையக்கூடாது என்ற கோஷமும்,எந்த அரசியல் வாதியுடனும் உறவு வைக்கக்கூடாது என்ற ஜனநாயக விழிமியங்களுக்கு மாறான உத்தரவும் ஊருக்கு ஒதுக்குகின்ற பணம் தேவையில்லை என்றும் மருதூர் பிரகடணம் என்ற பல விடயங்களை உள்ளடக்கி மக்கள் மத்தியில் கூறியவர்கள்.
உள்ளுராட்சி சபை கோஷம் மேலோங்குவதற்கான காரணம்
சென்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிராஸ் மீராசாஹிபு, பிரபல சட்டத்தரணி நிசாம் காரியப்பர் போன்றவர்கள் வேட்பாளராக நிறுத்தினார்.
இரண்டு ஊர்களையும் சேர்ந்தவர்கள் (உ10ம்) ஜெமீல் மாகாண சபை உறுப்பினராக இருந்தபோது சிராஸ் மீராசாஹிபை கல்முனை மாநகர சபை வேட்பாளராக முஸ்லிம் காங்கிரஸில் சேர்த்துக் கொள்வதற்கு சிராஸிடம் 10 இலட்சம் ரூபா கைமார்த்து என்ற போர்வையில் இலஞ்சம் பெற்று வேட்பாளராக நிறுத்தினார்.
பிரபல சட்டத்தரணி நிஸாம் காரியப்பரை மேயராக வரவேண்டும் என்ற சிந்தனை ஜெமிலுக்கு இதற்கு முன்பு நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலில் மருதமுனை மக்கள் அதிகப்படியான வாக்குகளை வழங்கியதால் பிரதேச சபை (கல்முனை) தலைவர் பதவி மருதமுனைக்கு சென்றது. இரண்டாம் முறை கல்முனை மாநகர சபை தேர்தல் நடைபெற்றது அதில் சட்டத்தரணி எச்.எம்.எம்..ஹரீஸ் மேயரானார். மூன்றாவது தடவையாக மாநகர சபைத் தேர்தலில் சிராஸ் மீராசாஹிப் அதிக வாக்குகள் பெற்றதால் மேயரானார். இந்த மேயர் பதவியை சிராஸ் மீராசாஹிபுக்கு கொடுக்கக் கூடாது என்ற கட்சிக்காரர்களையும், தலைவரையும் தம்வசப்படுத்தி இந்த ஜெமீல் வாதிட்டபோது இரண்டு, இரண்டு வருடங்களாக பிரிக்கப்பட்டது. பின் இரண்டு வருடங்கள் முடிவடைந்து விட்டது. நிஸாம் காரியப்பருக்கு மேயர் பதவி கொடுக்க வேண்டும். சிராஸ் மீராசாஹிபுடன் உங்கள் மேயர் பதவியை இராஜினாமா செய்யுங்கள் என்று கேட்டபோது சிராஸ் மீராசாஹிபுடைய நேரடி ஆதரவாளர்கள் ஜெமீலுடைய சொத்துக்களை உடைத்து சின்னா பின்னமாக்கினார்கள்
அதைத் தொடர்ந்து கட்சியும், தலைமைத்துவமும் மேயர் பதவியை இரண்டு வருடங்களாக பிரித்து பிரபல சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கு வழங்கப்பட்டது. இதன் பின் ஜெமீல் சிராஸ் மீராசாஹிபுக்கு 10 இலட்சம் ரூபாவை கொடுத்து விட்டார். பின் சிராஸ்மீராசாஹிபு கட்சியை விட்டு வெளியேறினார்.
அன்பார்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளே,இளைஞசர்களே, தாய்மார்களே, சகோதர, சகோதரிகளே
இந்தப் பள்ளிவாசல் தலைவர் ஒரு சில நிர்வாக அங்கத்தவர்களுடன் இணைந்து செயலாற்றி உலமா சபைத் தலைவர், உலமா சபை உறுப்பினர்கள் இவர்களுடன் ஒன்றிணைந்து தான் மருதூர் பிரகடணம் மருதூரில் பொம்மை எரிப்புக்களும், ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் ஊர்வலம், மேடைப்பேச்சு ஜும்மா கொத்துபாவில் உரை என்பனவற்றுடன் இரண்டு ஊர் மக்களையும் பிரிவினை ஏற்படுத்துவதற்கான உரைகள், இது எல்லாமே உலமாசபை இணைந்து செயலாற்றிய விடயமாகும். இந்த செயல்பாடு குர்ஆன்,ஹதீசிக்கு உட்படுத்தப்பட்டதா? என்று நீங்கள் விளங்க வில்லையா? அதிகாரப்பரவலாக்கம் செய்வதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர்.
அன்பார்ந்த தாய்மார்களே சகோதர சகோதரிகளே
இந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) ஜெமீல், சிராஸ் மீராசாஹிபு, ஜுனைடீன் (மான்குட்டி) AO உதுமாலெவ்வை இவர்கள் எல்லாம் அரசியல் பதவி வழி வகுக்கின்றனர். இவர்களை அரசியல் ரீதியாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். ஜெமீல் வயல்காலையில் 500 மேற்பட்ட மருதூர்வாசிகளை அழைத்து சாப்பாடு கொடுத்தார் அதற்கு சென்றவர்கட்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.
சாய்ந்தமருது ஜும்மாப் பள்ளிவாசலும் சுயேட்சைக் குழுவும்
ஜும்மாப் பள்ளிவாசல் மக்கள் மத்தியில் வெளியிட்ட பிரகடணம் அரசியல் சாயம் பூசாதவர்களை சுயேட்சைக் குழுவில் வேட்பாளராக நிறுத்துவோம் என்று கூறினார்கள். தற்போது நியமிக்கப் பட்டிருக்கின்ற வேட்பாளர்கள் எல்லாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காரர்கள் (மயில்) சுயேட்சைக் குழு. ACMC தலைவர் றிஷாhட்டை பொம்மை கட்டி எரித்தவர்கள் பள்ளிவாசலை சேர்ந்தவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை தனது பக்கம் அழைப்பதற்காக இந்த மகுடியான வேசத்தை செய்துள்ளீர்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களுடைய வாக்கை மயிலுக்கும், சுயேட்சைக் குழுவுக்கும் பெறுவதற்காகவா?
அன்பார்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளே, சகோதரிகளே,தாய்மார்களே
இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்த காலம் தொட்டு சாய்ந்தமருது மக்கள் போராளிகள், சகோதர. சகோதரிகள், தாய்மார்கள் எல்லோரும் நோன்பிருந்து உருவாக்கப்பட்ட கட்சிதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (எமது இதயம்) இவற்றை பாதுகாத்து எமது சமூகத்தின் விடுதலையைப் பெற நாம் அனைவரும் இரவு,பகலாக முயற்சி செய்யவேண்டும் என தாழ்மையாக வேண்டு கின்றோம்.
மாகாண சபையும் ஜெமிலும்
இதற்கு பிறகு மாகாண சபை தேர்தலில் ஜெமீல் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின் கட்சியுடன் மாகாண சபை அமைச்சர் பதவியும், மறு கட்டத்தில் மாகாண சபை முதலமைச்சர் பதவியும் வேண்டும் எனக் கேட்டு போராடி முடியாமல் கட்சியை விட்டு வெளியேறி அந்தக் கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றார். அவருக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை குழைப்பதற்கு கிடைத்த ஆயுதம் உள்ளுராட்சி சபையேயாகும்.
அன்பான சாய்ந்தமருது வர்த்தகப் பெருமக்களே,இளைஞர்களே!
வர்த்தகர்களும், இளைஞர்களும் பேஸ்புக் ஊடாக இரண்டு ஊர்களையும் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேஸ்புக் ஊடாக இரண்டு கிராமத்திலுள்ள வர்த்தகர்களும், இளைஞர்களும் ஊர்வாதம் பேசி பகைமையை உருவாக்கியதன் காரணத்தினால்தான் இந்த உள்ளுராட்சி சபையைப் பெறுவதற்கு தாமதம் ஏற்படுவதற்கான காரணம் கண்டறியப்பட்டுமுள்ளது. எனவே பேஸ்புக் விடயத்தை தவிர்த்து நடக்குமாறு மிகத்தாழ்மையுடன் இப்பிரசுரம் ஊடாக உங்களை வேண்டிக்கொள்கின்றோம்.
அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே
மீண்டும் எமதூருக்கு உள்ளுராட்சி சபை வேண்டும் என்று அன்றும் இன்றும் கேட்கின்றவர்கள் யார். ஊர்களை குழப்புகின்றவர்கள், மயில ;கட்சிக்காரர்கள்,எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் அமைதியான முறையில் உள்ளுராட்சிசபையை பெறவேண்டும் என்று முயற்சித் தவர்கள். எமது கல்முனை தொகுதியை ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் இன்னும் மூன்று வருடங்கள் ஆளப் போகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் உள்ளுராட்சி சபை பெற்றுத்தரும் போராளிகளே சுயேட்சைக்கோ, மயிலுக்கோ வாக்களிப்பதன் மூலம் எமது உரிமையை பெறமுடியாது.
சாய்ந்தமருதுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கிய தேசியப்பட்டியல் பின்வருமாறு
01. எஸ்.நிஜாமுத்தீன் சட்டத்தரணி 6 வருடங்கள். இவர் கட்சியின் அனுமதி இல்லாமல் மாற்றுக்கட்சியுடன் இணைந்து பணமும்,பிரதி அமைச்சர் பதவியும் பெற்றுக்கொண்டு கட்சியை விட்டு மாறி பென்சன் பெற்றுக்கொண்டு அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.
02. மர்ஹும் றிஸ்வி சின்னலெவ்வை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருதுக்கு மறக்க முடியாத சேவையாக இரண்டு தேசியப்பட்டியலை வழங்கியது.
அன்பார்ந்த முஸ்லிம் வாக்காளப் பெருமக்களே!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள்தான் இன்று மரைக்காயசபையுடன் இணைந்து ஊருக்கு உள்ளுராட்சி சபை என்ற கோஷத்தை எழுப்பிக்கொண்டு சுயேட்சைக்குழுவாக போட்டியிடுகின்றார்கள். இவர்களோடு சேர்ந்து உள்ளுராட்சி சபை பெறவேண்டும் என போராடி ஹறுத்தால்களையும், பொம்மை எரிப்புக்களையும் நடாத்தியவர்கள் எங்கே? அவர்கள் சுயேட்சைக்குழுவுடன் இருக்கின்றார்களா? அனேகமானவர்கள் வெளியேறிவிட்டனர். 2015 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கூட நமது கட்சிக்கு சாய்ந்தமருதில் கிடைக்கப்பட்ட மொத்த வாக்கு கிட்டத்தட்ட எட்டாயிரத்திற்குமேல். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயிலுக்கு கிடைத்த வாக்குகள் கிட்டத்தட்ட 3500. சென்ற தேர்தலை அவதானித்தால் இந்த ஊரில் இரண்டு பிரபலங்கள் ஒன்றுகூடி (ஜெமீல், சிராஸ்) மயிலாட்டம் ஆடி கிடைத்த வாக்குகள் 3500 ஆகும். எனவே சுயேட்சைக்குழு ஒன்றின் ஆட்டத்தின் ஊடாக பசப்பு வார்த்தைகள் ஊடாக சாய்ந்தமருதூரில் முழுவாக்குகளையும் பெறப்போகின்றோம் என்று கூக்குரல் இட்டு திரிபவர்களுக்கு நீங்கள் வாக்களிப்பதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சியை அழிப்பதாகவே முடியும்.
எமதூருக்கு உள்ளுராட்சிசபை பெறவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகின்ற யானைச் சின்னத்திற்கு வாக்களிப்பதால் இந்த கட்சியில் போட்டியிடுகின்ற 6 வட்டார உறுப்பினர்களையும் தெரிவு செய்கின்றபோது இன்னும் 4 ஆசனங்களை மேலதிகமாகப்பெற்று 10 உறுப்பினர்களுடன் உள்ளுராட்சி சபையைப் பெறமுடியுமென உறுதியளிக்கின்றோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவர் அவர்களை விமர்சிப்பவர்களுக்கு அன்பான வேண்டுகோள்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவர் அவர்களை கட்சியில் இருந்து வெளியேற்றவேண்டும் என்று கட்சி அல்லாதவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்கின்றனர் ஆனால் நீங்கள் கட்சிக்கு உள்வருவதினால் இந்த விடயத்தை பேசித் தீர்மானிக்கலாம்.
சாய்ந்தமருதுக்கு பிரதேச செயலகம் எப்படி வந்தது
சாய்ந்தமருதுக்கு பிரதேச செயலகம் எவ்வாறு திறக்கப்பட்டது என்பது இன்றைய இளைஞர் போராளிகளுக்கு தெரியுமா. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுடைய முயற்சியின் காரணமாக சாய்ந்தமருது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு அமைப்பாளர் ஏ.எல்.எம்..றசீட் (புர்க்கான்ஸ்) மத்திய குழு உறுப்பினர்கள், கட்சிப் போராளிகள் அவர்களின் ஒத்துழைப்புடன் பெறப்பட்டது. இந்தப் பிரதேச செயலகம் உதவி செயலகமாக உருவாக்கப்பட்டு பின் அதை நிரந்தர செயலகமாக ஆக்குவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருதுக்கான அமைப்பாளர் ஏ.எல்.எம்..றசீட் (புர்க்கான்ஸ்) மத்திய குழு உறுப்பினர்கள், சாய்ந்தமருது ஜும்மாப் பள்ளிவாசல் தலைவர் மர்ஹும் முகைடீன் மற்றும் சில மரைக்காயமார்கள் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரபிடம் சென்று கதைத்தபோது பிரதேச செயலகத்தை நிரந்தரமாக்கி வைத்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுகாலவரையும் செய்த பாரிய அபிவிருத்தித் திட்டங்கள்.
01. தென்கிழக்குப் பல்கலைக் கழகம்
02. நீர்வழங்கல்
03. தோணா அபிவிருத்தி - 19 கோடி ரூபா நிதி கட்டம் கட்டமான வேலை.
04. சாய்ந்தமருது சந்தை
05. தேசியத் தலைவர் றவூப் ஹக்கீம் நிதியிலிருந்து கரைவாகு வட்டையில்
பொது நிறுவனங்களை அமைப்பதற்கு 4 1/2 ஏக்கர் காணிக்கு மண்போட்டு நிரப்பியது நாலரைக்கோடி ரூபா.
06. காதி நீதிமன்றம் அமைத்தது- 60 இலட்சம்
07. பௌசி கடற்கரை மைதானம் - ஒரு கோடியே பத்து இலட்சம்
08. கடற்கரை சிறுவர் பூங்கா - ஒரு கோடி ரூபா.
09. சாய்ந்தமருது ஜும்மாப் பள்ளிவாசலுக்கு சவுண்ட் சிஸ்டத்திற்கு தேசியத் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களின் சொந்தபபணம்; ஒன்பது இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் அல்-ஹாஜ்.கௌரவ எச்.எம்.எம்.ஹரீஸ் சட்டத்தரணி ஊடாக செய்த அபிவிருத்தி வேலைகள்.
01. சாய்ந்தமருது வைத்தியசாலையில் பல அபிவிருத்திகள் - கிட்டத்தட்ட 1 1/2 கோடி ரூபா.
02. அஷ்;ரப் மைதானம் வொலிவோரியன் - மூன்று கோடியே பத்து இலட்சம்.
03. நீர்ப்பாசனம் வொலிவோரியன் - ஒரு கோடியே ஐம்பது இலட்சம்.
04. சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் வளவில் அமைக்கப்பட்டிருக்கும் நூலகம் - 20 இலட்சம்
05. பல வீதிகள் - 1 கோடி 50 இலட்சம்.
இதேபோல் இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்கள் செய்யப்படவுள்ளன. இவ்வாறு நடைபெற்றுள்ள அபிவிருத்திகளை இந்த மரைக்காயசபையுடன் இணைந்து செயல்படுகின்ற சுயேட்சைக் குழுவால் அபிவிருத்தியினை செய்ய முடியுமா? ஆனால் அவர்களால் செய்ய முடிந்த விடயம் கல்முனை மாநகரசபையில் பின் ஆசனத்தில் அமர்ந்துகொண்டு பேச்சுக்களை கேட்கலாமே தவிர அவர்களால் அபிவிருத்திகளை செய்ய முடியுமா? ஆகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடைய ஆதரவாளர்கள் நன்கு சிந்தித்து உங்கள் வாக்குகளை அமோகமாக யானைச்சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அன்பாக வேண்டுகின்றோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் சாய்ந்தமருதில் போட்டியிடும் வேட்பாளர்கள்.
01. 18ம் வட்டாரம் – ஏ.சி.எஹியாக்கான் (ஸ்ரீ லங்கா முஸ்லிம் 1,3ம் குறிச்சி காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், அம்பாரை மாவட்ட பொருளாளரும் தொழிலதிபரும்)
02. 19ம் வட்டாரம் – ஏ.ஏ.வஸீர் (முன்னாள் கல்முனை 2,4,6ம் குறிச்சி மாநகர சபை பிரதி மேயர்)
03. 20ம் வட்டாரம் - ஏ.நஸார்டீன் (முன்னாள் கல்முனை 8,10,12ம் குறிச்சி மாநகர சபை உறுப்பினர்)
04. 21ம் வட்டாரம் - பாமி மன்சூர் (தொழிலதிபர்) 5ää7ää9 ம் குறிச்சி
05. 22ம் வட்டாரம் – எம்.ஐ.எம்..பிர்தௌஸ் BA (ஸ்ரீ லங்கா 11,13,15ம் குறிச்சி முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடஉறுப்பினரும், முன்னாள் கல்முனை மாநகரசபை பிரதி மேயரும்,சாய்ந்தமருது அமைப்பாளரும்
06. 23ம் வட்டாரம் – ஏ.எம்..முபாறக் (ஸ்ரீ லங்கா முஸ்லிம் 14,16,17ம் குறிச்சி காங்கிரஸின் மூத்த போராளி)
உங்கள் வாக்குகளை 2018.02.10 ம் திகதி சனிக்கிழமை அதிகாலையில் சென்று (நேர காலத்தோடு சென்று) யானை சின்னத்துக்கு வாக்களிப்பதோடு உங்கள் குடும்பம்,நண்பர்களை அழைத்துச் சென்று வாக்களிக்க உதவுமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.
வஸ்ஸலாம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
மத்திய குழு
சாய்ந்தமருது.
