இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் எட்வட் மற்றும் அவரது மனைவி ஷோபி ஆகியோர் 02.02.2018 அன்றைய தினம் நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
விமானத்தில் மூலம் நுவரெலியா நகரசபை மைதானத்தில் காலை 10.40 மணியளவில் வந்திறங்கிய இவர்களை நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர். புஸ்பகுமார தலமையிலான குழுவினர் வரவேற்றனர்.
அதன்பிறகு, நுவரெலியாவில் உள்ள விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மென்கெப் பாடசாலைக்கு சென்ற எட்வட் தம்பதியினர் அங்கு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதேவேளை இளவரசர் எட்வெட் மற்றும் இளவரசி ஆகியோர் கந்தப்பளை கோட்லோஜ் பெருந்தோட்டப்பகுதிக்கும் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள தேயிலை மலைகளையும் பார்வையிட்டனர்.
இலங்கையின் 70வது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்காக சிறப்பு விருத்தினராக பிரித்தானிய இளவரசர் எட்வட் மற்றும் அவரது மனைவி இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







