திருகோணமலை(தேச கீர்த்தி" விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார் புல்மோட்டை யாசீர்

ஹஸ்பர் ஏ ஹலீம்-

தேசிய ஒருமைப்பாட்டிற்கான முற்போக்கு பேரவையின் தலைமைப்பீட உறுப்பினரான திருகோணமலை புல்மோட்டையைச் சேர்ந்த யாசீர் எம்.அனீபா தேச கீர்த்தி விருது வழங்கி நேற்று(24) கௌரவிக்கப்பட்டார். இலங்கை தபாலக அமைச்சின் கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக "மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பினால்" ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் இது வரை இவரால் முன்னெடுக்கப்பட்ட சமூக நல்லிணக்கச்செயற்பாடுகள், இன மத நல்லிணக்க செயற்பாடுகள், தேசிய ஒருமைப்பாடு, சமூக சேவைகள் என்பவற்றிக்காக
"தேச கீர்த்தி" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

24 வயதினைக் கொண்ட இவ் இளைஞர் சமூகப் பணி பட்டதாரியும் மற்றும் சட்டக் கற்கை மாணவனும் எழுத்தாளரும்,அரசியல் செயற்பாட்டாளரூம் ஆவார்.இவர் புல்மோட்டை மத்திய கல்லூரி,சியம்பலாகஸ்கொட்டுவ மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் பீ.எம்.அனீபா,ஏ.எல்.வஸீரா ஆகியோரின் ஏக புதல்வனுமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -