சீறிய குண்டில்
சிதறுண்டு போனார்கள்
சிறிய
சிரியர்கள்
சிதறும் உடல்களும்
கதறும் உறவுகளும்
பதறும் மனங்களும்...
ஒரு
கொலை வெறி பிடித்தவனின்
கொடூரத்தில் விளைவுகள்
'சாம்'ராஜ்ஜியத்தை
'சாம்'பலாக்கும்-அந்தச்
'சாம்'-'பிராணி'
இறுதியில்
சரிவதையும்
எரிவதையும்
சரித்திரம் சொல்லும்.
ஆ'ஷாத்தான் '
அப்பாவிகளை
அழித்தான் என்றும்
அந்தக் கொடியவன்
அதனால் அழிந்தான் என்றும்
எதிர்கால சமூகம்
இவனைப் பழிக்கும்.
அதிகார வெறிக்காக
அனைத்தையும் அழித்தவனின்
வீட்டுக் கதவை
விதி ஒரு நாள் தட்டும்.
ஒரே ஒருவனுக்காக
ஒரு நாடே அழிந்ததை
ஒரு நொடியில்
உணர வைக்கும்.
அந்த
அரக்கன் உரக்க
அலறுவதை
இந்தக் குழந்தைகளின்
இரத்த பாசங்கள்
விம்மலோடு பார்க்கும்.
அநியாயக் காரனின்
அராஜகம் அத்துடன்
அழிந்து போகும்