உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் வட்டகொடை மடக்கும்புரையில் உள்ள கலாபூவணம் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்தார்.
வாக்களிப்பிற்காக அமைச்சர் திகாம்பரம் கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் தலவாக்கலை மைதானத்தை அடைந்தமை குறிப்பிடத்ததக்கது.
உள்ளுராட்சி சபை தேர்தலுக்காக, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டாமான் தனது வாக்கு பதிவு செய்துள்ளார்.
கொத்மலை வேவண்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் ஆறுமுகன் தொண்டமான். வாக்களிப்பிற்கு முன்பதாக தொண்டமான் விஷேட வழிபாடுகளில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

