வேலையற்ற இளைஞர்களுக்கு சர்வோதய நிறுவனத்தினால் தொழில் வாய்ப்பு


ஹஸ்பர் ஏ ஹலீம்-
லங்கையில் தற்போது காணப்படும் வேலையற்ற இளைஞர் யுவதிகளின் நிலையைக் கருத்திற் கொண்டு வேலையற்ற வீதத்தினை குறைக்கும் நோக்கில் இளைஞர் முயற்சியான்மை அபிவிருத்தித் திட்டம் ஊடாக வேலை வாய்ப்புக்களை வழங்கவுள்ளதாக சர்வோதய நிறுவனத்தின் இத் திட்டத்துக்கு பொறுப்பான இணைப்பாளர் ஜே.எம்.தஜ்மீல் தெரிவித்தார்.வேலையற்ற இளைஞர்களின் திறன்களை விருத்தி செய்து சொந்த வியாபார நிறுவனங்களை உருவாக்குவதலும் விரிவாக்கம் செய்தலும் எனும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சர்வோதய நிறுவனத்தினால் இவ் இளைஞர் முயற்சியான்மை அபிவிருத்தி செயற்திட்டம் எட்டு(யாழ்ப்பாணம்,மன்னார்,முல்லைத்தீவு,திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை,மொனராகலை,ஹம்பாந்தோட்டை) ஆகிய மாவட்டங்களில் நடை முறைப்படுத்தப்படவுள்ளதாக மேலும் இணைப்பாளர் தெரிவித்தார்.இத் திட்டத்தில் இணைந்து கொள்ள ஆர்வமுடைய 18-35 இடைப்பட்ட வயதுகளையுடைய இளைஞர் யுவதிகள் மேலுள்ள சர்வோதய மாவட்ட காரியாலயங்களிலும் அல்லது www.sarvoday.org, www.sarvodayafinance.lk எனும் இணையத்தளங்கள் ஊடாகவும் sarvodaya.srilanka எனும் முகநூல் பக்கத்தில் இருந்தும் விண்ணப்பப் படிவங்களை பெற்று மார்ச் 22 க்கு முன்பு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இத் திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு ஜே.எம்.தஜ்மீல் 0766612131, 0112647159 எனும் இலக்கங்களுடன் தொலைபேசி மூலமாக பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -