எந்தசூழ்நிலையிலும் பெண்கள் எதற்கும் சோரம்போகமாட்டார்கள்: லஞ்சத்திற்கு விலைபோகமாட்டார்கள்:ஊழலற்ற அரசியலை உருவாக்குவோம்!

அம்பாறை மாவட்ட வேள்வி பெண்வேட்பாளர்கள் சூளுரை!


காரைதீவு நிருபர் சகா-
ம்பாறை மாவட்டத்தில் தெரிவாகும் 92உள்ளுராட்சிப்பிரதிநிதிகளில் 50வீதமானோர் எமது வேள்வி அமைப்பின் உறுப்பினர்களாக இருப்பார்கள். எந்த சூழ்நிலையிலும் எமது பெண்கள் எதற்கும் சோரம் போகமாட்டார்கள். குறிப்பாக லஞ்சத்திற்கு விலைபோகமாட்டார்கள். லஞ்சம் ஊழலற்ற அரசியலை உருவாக்குவோம்.
இவ்வாறு அம்பாறை மாவட்ட உள்ளுராட்சிமன்றங்களுக்குப் போட்டியிடும் பெண்வேட்பாளர்கள் சூளுரைத்தனர்.

மனிதஅபிவிருத்தித்தாபனத்தின் அம்பாறை மாவட்ட வேள்வி பெண்கள் அமைப்பு ஏற்பாடுசெய்த செய்தியாளர் மாநாடு நேற்று(30) செவ்வாய்க்கிழமை காரைதீவு பிஸ்மில்லா விடுதி மண்டபத்தில் அமைப்பின் உப தலைவி செல்வி றிலீபா தலைமையில் நடைபெற்றது.

அந்த மாநாட்டில் செய்தியாளர்கள் கேட்டகேள்விக்குப் பதிலளிக்கையில் மேற்கண்டவாறு பதிலளிக்கையில் சூளுரைத்தனர்.

செய்தியாளர் மாநாட்டின்நோக்கம் பற்றி வேள்வி அமைப்பின் உபதலைவி றிலீபா விளக்கமளிக்கையில்:
எமது அமைப்பிலுள்ள 55பெண்கள் பல்வேறு கட்சிகள் சுயேச்சை அணிகளில் இம்முறை உள்ளுராட்சித்தேர்தலில் போட்டியிடுகின்றனர். எமது வலுவூட்டலின் பிரகாரம் மேலும் 121 பெண்கள் வேட்பாளர்களாக களத்திலிறங்கியுள்ளனர்.
எமது பெண்வேட்பாளர்களுக்கு இதுவரை யாரும் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவோ மிரட்டியதாகவோ எவ்வித பதிவுமில்லை. களத்தில் அவர்கள் ஆண்வேட்பாளர்களுக்கு நிகராக செயற்படுகின்றனர்.

நாம் எமது வேள்வியுடாக சகல கட்சிச்செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பினோம். யாருமே கண்டுகொள்ளவில்லை.
ஆனால் இறைவனின் சித்தம். பாருங்கள். அவர்கள் வந்து கிராம மட்டத்தில் பெண்வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும்போது எமது வேள்வி உறுப்பினர்களையே தெரிவுசெய்துள்ளனர். அதுவே எமது முதல் வெற்றி. அம்முறை தெரிவாகும் 92பேரில் 50வீதமானோர் எமது உறுப்பினர்களாக வருவர்.
அமைப்பின் செயலாளர் நுஸ்ரத் கூறுகையில்:
கடந்த 5வருடங்களாக பெண்கள் உரிமை தொடர்பில் பணியாற்றிவரும் வேள்வி அமைப்பின் 15 உறுப்பினர்கள் இங்கு வேட்பாளர்களாக இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். என்றார்.

அவர்கள் மேலும் கருத்துரைக்கையில்:

அரசியல் என்றால் அடிதடி சாக்கடை என்றுகூறுவார்கள். அதனை மாற்றி லஞ்சஊழல் அற்ற சமுகத்திற்கு பயன்தரக்கூடிய தூய அரசியலை பெண்களாகிய நாம் ஏற்படுத்துவோம்.
பதுளையில் பெண்அதிபர் முழந்தாலிடப்பட்ட சம்பவத்தை முற்றாகக் கண்டிக்கிறோம். அப்படிப்பட்ட ஆண் அரசியல்வாதிகளை நாம் வெறுக்கிறோம். நிராகரிக்கிறோம்.
பெண்களுக்கெதிரான வன்முறைகள் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்துவோம்.

பெண்ணுக்கு எதிரி பெண்தான் - ஜ.தே.க.வேட்பாளர் நந்தினி.

கல்முனை மாநகரசபையின் நற்பிட்டிமுனை 9ஆம் வட்டார ஜ.தே.கட்சி பெண்வேட்பாளர் நடராஜா நந்தினி கருத்துரைக்கையில்:

நாட்டில் சட்டம் இயற்றும் இடத்திலும் திட்டம் தீட்டும் இடத்திலும் பெண்கள் அலங்கரிக்கவேண்டும் என்பதற்காக இத்தேர்தலில் வேள்வி அமைப்பு சார்பாக போட்டியிடுகின்றேன்.
எமக்கு ஆண்கள் எதிரி அல்ல. பெண்களுக்கு எதிரி பெண்கள்தான். எமது பிரதேச தேர்தல் மேடைகளில் இரு பெண்வேட்பாளர்கள் என்னைத் தூசித்து உரையாற்றியுள்ளனர். இது எனக்கு வேதனையாகவுள்ளது.

சமுதாயத்தில் நலிவுற்ற பெண்களுக்கு ஆளும் ஜ.தே.கட்சி சார்பாக சேவையாற்ற ஒரு சந்தர்ப்பத்தை இந்த புதிய கலப்புமுறைத்தேர்தல் வாய்ப்பளித்துள்ளது. தெரிவானால் இனமதபேதமற்ற சேவையைச்செய்வேன் என்றார்.
காரைதீவுப்பிரதேசசபைக்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்புசார்பாகப் போட்டியிடும் பெண்வேட்பாளர் கே.ஜெயராணி கருத்துரைக்கையில்:
பெண்களுக்கு எமது பிரதேசசபையால் பெற்றுக்கொடுக்கக்கூடிய அத்தனை சேவைகளையும் செய்யவே நான் போட்டியிடுகின்றேன்.

கல்முனை மாநகரசபைக்காக அ.இ.மு.கா. சார்பில் போட்டியிடும் பெண்வேட்பாளர் செல்வி சாபிறா கருத்துரைக்கையில்:

25வீதம் பெண்களுக்கு ஒதுக்கியமைக்கு முதலில் அரசுக்கு நன்றிதெரிவிக்கிறேன். இந்தவாய்ப்பினூடாக எமது வட்டார மக்களுக்கு எதற்கும் அஞ்சாது உரிமையைப்பெற்று கிடைக்கவேண்டியதைப்பெற்றுச் சேவைசெய்வேன்.
காரைதீவுப்பிரதேசசபைக்காக ஸ்ரீலங்கா சுதந்தரக்கட்சி சார்பாகப் போட்டியிடும் பெண்வேட்பாளர் ப.ரதீஸ்குமாரி கருத்துரைக்கையில்:

இதுவரைகாலமும் நாம் தேர்தலென்றால் வாக்குப்போடுவது மட்டும்தான் எமது வேலையாக இருந்தது. ஆனால் இப்போது நாம் தேர்தலில் போட்டியிட 25சதவீத ஒதுக்கீடு வாய்ப்பளித்துள்ளது. எனவே அரசுக்கு நன்றி.

சம்மாந்துறை பிரதேசசபைக்காக வளத்தாப்பிட்டி வட்டாரத்தில் ஜ.தே.கட்சி சார்பில் போட்டியிடும் பெண்வேட்பாளர் கே.திரௌதம்மா கருத்துரைக்கையில்:
நாம் கஸ்ட்டப்பட்டு வேலைசெய்து வருகின்றோம். ஆனால் எமது பகுதியில் பெண்வேட்பாளர் என்றால் எமது எதிhக்கட்சியினர் ஏளனமாகப் பார்ப்பதும் வசை பாடுவதுமாக உள்ளனர். ஏன் ஆண்கள் மட்டும்தான் வேட்பாளராகமுடியுமா?
ஆனால் நான் அதற்காக பயப்படவில்லை. ஆளும் ஜ.தே.கட்சியைச்சேர்ந்தவள் நான்.
வீட்டைக்கட்டியெழுப்பவும் நாட்டைக்கட்டியெழுப்பவும் பெண்களால் முடியுமென்பதை நாம் நிருபிப்போம்.
கல்முனை மாநகரசபைக்காக ஜ.தே.கட்சியில் 8ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் பெண்வேட்பாளர் பே.மனோரஞ்சினி கருத்துரைக்கையில்:

எமது வேள்வி அமைப்பில் 3000 உறுப்பினர்களுள்ளனர். அவர்களில் நாம் வேட்பாளராக நிற்பது எமக்குப்பலம்தான். எமது வேள்வி அமைப்பின் கொள்கை விதிகள்தான் எம்மை வழிநடாத்தும். பாதிப்புற்ற பெண்களுக்கு நிவாரணம்வழங்கி சேவையாற்றியுள்ளேன். உறுப்பினரானால் மக்கள்சேவை செய்வேன்.
காரைதீவுப்பிரதேசசபைக்காக தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாகப் போட்டியிடும் பெண்வேட்பாளர் பா.வசந்தி கருத்துரைக்கையில்:
கடந்த 30வருடமாக தொண்டர் ஸ்தாபனங்களில் எவ்வித வருமானமுன்றி சேவையாற்றிவந்துள்ள எனக்கு தேர்தலில் நிற்க இறைவன் வாய்ப்பளித்துள்ளான்.
பெண்களுக்கு எமது பிரதேசசபையால் பெற்றுக்கொடுக்கக்கூடிய அத்தனை சேவைகளையும் செய்வேன்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -