மீண்டும் மஹிந்த அலை; வெற்றிவாகை சூடும் தாமரை மொட்டு



ள்ளூராட்சித் தேர்தலில் இன்று காலை 9 மணி வரை வெளியான முடிவுகளின் படி, மஹிந்த ராஜபக்ச சார்பு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சுமார் 40 வீத வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் பொதுஜன முன்னணிக்கு 500 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாமிடத்தில் உள்ளது. 30 வீத வாக்குகளைப் பெற்றுள்ள ஐதேக இதுவரை 320 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை பெற்றிருக்கிறது.

மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 10 வீத வாக்குகளுடன் மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் இந்தக் கட்சிக்கு சுமார் 100 ஆசனங்களே கிடைத்துள்ளன.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இதுவரையில் 5 வீத வாக்குகளுடன், சுமார் 110 ஆசனங்களைக் கைப்பற்றி நான்காவது இடத்தில் உள்ளது.

ஜேவிபி 6 வீத வாக்குகளுடன், 60 ஆசனங்களைக் கைப்பற்றி அடுத்த நிலையில் உள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -