பொய்” கேட்டு அதிர்ந்து போனேன்



டந்த இரவு கல்முனையில் இறுதித் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் வன்னி அமைச்சர், “ முழு நாடும் அரசும் எதிர்த்தபோதும் எனது மக்களின் ஒரு அங்குல நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்கவில்லை”; என்று கூறியதைக் கேட்டு உண்மையில் அதிர்ந்து விட்டேன்.

இப்படியொரு மாபெரும் பொய்யை எல்லோராலும் சொல்லிவிட முடியாது. முசலியில் மஹிந்தவின் காலத்தில் பறிகொடுத்த 12000 ஏக்கர் காணியை என்னவென்பது? அதற்குரிய நடவடிக்கை எடுக்காமல் ஊடகங்களில் குறிப்பாக தொலைக்காட்சிகளில் எல்லாம் அதைப்பற்றி விவாதம் நடாத்தி விளம்பரம் தேடியதை என்னவென்பது?

அதன்பின்னர் இந்த மைத்திரி அரசாங்கத்தில் ஒரு லட்சம் ஏக்கரைப் பறிகொடுத்ததை என்னவென்பது? இந்த இழந்த காணி மீட்புப் பெயரில் முசலியில் பல நாட்கள் ( மோடி வரும்வரை) செய்த சத்தியாக்கிரகத்தை என்னவென்பது? இதற்காக பதவியைத் தூக்கிவீசுவேன், ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடுவேன், என வீறாப்புப்பேசியதை என்னவென்பது?
எப்படி முழுநாடும் அறிந்த ஒரு உண்மையை மறைத்து பொய்பேச முடிகிறது?

இந்த நாட்டு முஸ்லிம்கள் எல்லாம் முட்டாள்கள்; அவர்களுக்கு எதுவுமே தெரியாது; என்ற எண்ணமா? அல்லது தான் பேசுவது தனது கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். தனது கூட்டத்திற்கு புத்திசாலிகள், நாலுவிசயம் தெரிந்தவர்கள் யார் வரப்போகிறார்கள். நம்மைப்போன்றவர்கள்தான் வருவார்கள், எனவே எந்த பொய்யையையும் சொல்லலாம்; என்ற எண்ணமா? அல்லது கல்முனையானெல்லாம் முட்டாள்கள் என்கின்ற எண்ணமா? ஏன் இந்தப் பொய்யைச் சொன்னார்?

கல்முனையில் வைத்து இந்தப்பொய்யைச் சொன்னதற்குரிய காரணத்தை அவர் கூறவேண்டும். I demand that he explain as to why he uttered this blatant lie.

அதேநேரம் முசலி மக்கள் சிந்தியுங்கள்! உங்கள் காணிகளை இழந்து தவிக்கின்றீர்கள். உங்களை சத்தியாக்கிரகம் செய்யவைத்து தனது அமைச்சுப் பதவியை உறுதிப்படுத்திக்கொண்டவர், இன்று கல்முனைக்கு வந்து கூறுகின்றார், உங்கள் காணி ஒரு அங்குலம்கூட பறிபோகவில்லையாம்.

கல்முனை மண்ணை பாதுகாப்பேன்
———————————————
தன்னை வாக்களித்து தெரிவுசெய்த முசலி மக்களின் மண்ணைப் பாதுகாத்துவிட்டார். இப்பொழுது தன் உயிரைக்கொடுத்தாவது கல்முனை மண்ணைப் பாதுகாக்கப்போகிறாராம். நம்புங்கள் சகோதரர்களே!

கடந்த மேல்மாகாண சபைத்தேர்தலில் கொழும்பு மக்களுக்கு பல வாக்குறுதிகளோடு, இறுதியாக புதுக்கடையில் நடைபெற்ற கூட்டத்தில் தன்உயிரையும் தருவதாக வாக்குறுதியளித்தார். கொலன்னாவை சுமார் 25000 இற்கு மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக்கொண்ட பிரதேசம். அங்கு முஸ்லிம்களுக்கு ஒரு பாடசாலைகூட இல்லை. இதன்காரணமாக பல குழந்தைகள் பாடசாலைப் படியைக்கூட மிதிக்கமுடியாமலும் சில தூரத்துப் பாடசாலைகளுக்கு செல்லும் சிறுவர்கள் வறுமைகாரணமாக இடைநடுவே கல்வியை விடுகின்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

கடந்த மாகாணசபைத் தேர்தலில் அவர்களுக்கு வழங்கப்பட்ட பிரதான வாக்கு ‘ ஒரு முஸ்லிம் பாடசாலையாகும்’. உயிரைக்கொடுத்து அந்தப்படசாலையைக் கட்டிக்கொடுத்துவிட்டாரா?
அமைதியான சாய்ந்தமருதின் கோரிக்கைக்குள் இவர் பைசர் முஸ்தபாவைக் கொண்டுவந்து தலைபோட்டு அதை பூதாகரமாக்கி இன்று கல்முனையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியது இவரில்லையா? இவர் உயிர்கொடுத்து கல்முனை மண்ணைப் பாதுகாக்கப்போகிறாராம். நல்லவேளை பதவியைத் துறந்தாயினும் கல்முனை மண்ணைப் பாதுகாப்பேன்; என்று கூறவில்லை. பதவி துறந்து, துறந்து அலுத்துவிட்டார். இப்பொழுது உயிரைக் கொடுத்து அலுத்ததன்பின் வேறு எதைக்கொடுப்பாரோ தெரியவில்லை.

சாய்ந்தமருதுக்குள் நுழைய மாட்டேன்
—————————————————
‘எனது கட்சி அங்கத்தவர் யாரும் மரணித்தாலேயொழிய அரசியல் செய்வதற்கு சாய்ந்தமருதுக்குள் நுழைய மாட்டேன்; என்று தைரியமாக கூறிய தலைமைத்துவம்’ என்றும் இரவு பெருமை பேசினார். இதை நாம் நம்ப வேண்டும். ஏனெனில் வாய்ச்சவடால்களை நிறைவேற்றுவதில் அவர் மிகவும் நேர்மையானவர்.
கடந்த பொதுத்தேர்தலில் சம்மாந்துறையில் வைத்து, ‘ மு கா வை விட ஒரு ஆசனம் குறைவாக எடுத்தாலும் தலைமைப் பதவியை ராஜினாமா செய்வேன்’ என்றார். செய்துவிட்டார். மானஸ்தன். அமைச்சுப்பதவியைத் தூக்கி எறிவேன்’ என பல தடவை சொன்னார். எறிந்து களைத்து விட்டார். இனிமேல் மரணவீட்டைத்தவிர சாய்ந்தமருதுக்கு அரசியல்செய்ய வரவே மாட்டார்.

பச்சத்தண்ணியும் ஹலால்
———————————
முழு நாடும் ஊழல் என்றது. ஆதாரம் இருக்கா? என்றார். பச்சத்தண்ணியும் ஹலாலாகத்தான் குடிப்பேன் என்றார். கணக்காய்வாளர் நாயகம் அமைச்சில் பாரிய ஊழல் என்று கடந்த ஒரு சில தினங்களுக்குமுன் கூறியிருக்கின்றார். ஆனால் அவரிடம் ஆதாரமில்லை. அவர் அகப்பைக்குறி பார்த்துத்தான் அக்குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். நம்புங்கள்.

யாஅல்லாஹ் முஸ்லிம் சமூகத்தை, குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை தீயசக்திகளிடமிருந்து, நடிகர்களிடமிருந்து, நயவஞ்சகர்களிடமிருந்து பாதுகாப்பாயாக.


வை. எல். ஸ். ஹமீட்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னாள் செயலாளர் நாயகம்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -