பாறுக் ஷிஹான்-
பருத்தித்துறை சக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்க கொடிக்கு அருகாமையில் இருந்து சூரிய உதயத்தையும் சூரியன் மறைவதையும்
இவ் இடத்தில் இருந்து சிறந்த முறையில் பார்க்க கூடிய இடம் என்பதால் உல்லாச பயணிகளின் பயன் கருதி அமைக்கப்பட்டுள்ளது.
யாழ் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாரச்சியின் வேண்டுகோளுக்கமைய 55 ஆவது படைபிரிவின் கட்டளை தளபதியின் மேற்பார்வையில் 551 ஆவது படை பிரிவின் முழு உதவியுடன் குறித்த இடத்தில் சுற்றுலா காட்சிகூடம் ஒன்று அமைக்கப்பட்டு சுற்றுலா வரும் பயணிகளுக்காக யாழ் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாரச்சியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ் விழாவிற்க்கு யாழ் கட்டலை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாரச்சி பிரதேச மக்கள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இவ் விழாவிற்க்கு யாழ் கட்டலை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாரச்சி பிரதேச மக்கள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.