பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் சாந்தனின்; நூல்களைப் பற்றியபின் வரும் உரைகள்;; இடம் பெறும்.
சாந்தனின் “கனவெல்லாம்” மொழிபெயர்ப்புக் கவிதைகள் நூலைப பற்றி மேமன்கவியும்,“;சிட்டுக்குருவி”சிறுகதைகள் நூலைப் பற்றி மு.தயாபரனும்,பயண நூலான “ஒளி சிறந்த நாட்டிலே” நூலைப் பற்றி ஞா.பாலச்சந்திரனும் ,“சாந்தனின் எழுத்துலகம்” நூலைப ;பற்றி கலாநிதி ந. இரவீந்திரனும், “என் முதல்வாத்து” மொழிபெயர்ப்புக் கதைகள் நூலைப் பற்றி சட்டத்தரணி இரா.சடகோபனும் உரையாற்றுவார்கள்.
அதனைத ;தொடர்ந்து, ‘சிட்டுக்குருவி” -நூலைப ;பறறி திரு. செ. சக்திதரன்,‘கனவெல்லாம்” மொழிபெயர்ப்புக் கவிதைகள் நூலைப் பற்றி கவிஞர் சடாகோபன், ‘சாந்தனின் எழுத்துலகம்’ நூலைப் பற்ற திருமதி. வசந்தி தயாபரன் ஆகியோர் கருத்துரைகளை வழங்குவார்கள்.
அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறும். எழுத்தாளர் சாந்தன் ஏற்புரையை வழங்குவார்.
கலை இலக்கிய நண்பர்களும், தமிழ்க் கதைஞர் வட்டமும் (தகவம்) இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் கலை இலக்கிய ஆர்வலர்கள் எல்லோரும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டப்படுகிறார்கள்.
