தேர்தல் கடமைக்கு சென்ற பிக் அப் வாகனம் விபத்து அலுவலர் ஒருவர் காயத்துடன் வைத்தியசாலையில்

முல்லைத்தீவு, நந்திக்கடல் சந்திக்கு அருகில இடம்பெற்ற வாகன விபத்தில் முல்லைத்தீவு உதவி தெரிவத்தாட்சி அலுவலர் குமாரசுவாமி முரளிதரன் காயமடைந்துள்ளார்.

அவர் பயணித்த கெப் வண்டி இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் அவருக்கு பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் சாரதியும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

உதவி தெரிவத்தாட்சி அலுவலர் குமாரசுவாமி முரளிதரன் மற்றும் காயமடைந்த ஏனையவர்கள் சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.(தெரண)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -