ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சம்மாந்துறை தேர்தல் பிரச்சாரக் கூட்டம்


அகமட் எஸ். முகைடீன்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (2) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை விளினையடி வட்டார வேட்பாளர் சட்டத்தரணி எம். சவ்பீர் தலைமையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதர், வன பாதுகாப்பு திணைக்களத்தின் ஓய்வுபெற்ற பிரதி வனபாதுகாவலரும் பட்டியல் வேட்பாளருமான எம்.எல். அப்துல் மஜீட் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சிப் போராளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -