பஹ்த் ஜுனைட்-
இன்று காத்தான்குடியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியினது காத்தான்குடி நகரசபைக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் காத்தான்குடி நகர சபைக்கான தலைமை வேட்பாளருமான முஜீப் இப்றாகீம் அவர்கள் உரையாற்றும் போது..
மக்களுக்கு சேவை செய்வதற்கு அடிப்படையாக கல்வி அறிவு உள்ள , திறமையுள்ள, நல்லொழுக்கம் சிறந்த பண்புகள் உள்ளவர்களால் மாத்திரமே முடியும் அதனால்தான் மக்கள் விடுதலை முன்னணி அனைத்து சபைகளுக்குமான வேட்பாளர்களை கல்வி அறிவுள்ள நற்பண்புகள் கொண்டவர்களை தெரிவு செய்து இத் தேர்தலில் களம் இறக்கியுள்ளோம்..
இந்த தேர்தலில் பல கட்சிகள் பல நூற்றுக்கணக்கான வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளார்கள் இதில் போதைப் பொருள் விற்பனை உட்பட பல குற்றச் செயல்களில் சிறைவாசம் அனுபவித்தவர்களை இன்று தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறக்கியுள்ளனர். இவர்களின் நோர்க்கம் மக்களுக்கு சேவை செய்வதற்கு அல்ல அவர்களது குற்றங்களை பாதுகாத்துக்கொள்வதற்கு அதிகார கவசம் போடுவதற்காகவே இது விடயத்தில் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
இத்தேர்தலில் வழங்கப்படும் வாக்குகள் ஒவ்வொன்றும் கவனமாக சிந்தித்து வழங்கப்படல் வேண்டும்.
போதைப் பொருள் விற்பனை முகவர்கள் குற்றவாளிகளுக்கும், ஊழல் செய்பவர்கள் திருடர்களுக்கும் வழங்கப்பட்டால் இச் சமூகம் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதை அறிவுரையாக வழங்குகிறேன்..
ஆகவே மக்கள் விடுதலை முன்னணி நல்லொழுக்கம் உள்ளவர்களை வேட்பாளர்களாக நியமித்துள்ளோம்
ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களையும் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களையும் நன்றாக அவதானியுங்கள் உங்கள் வாக்குகளுக்கும் உங்களுக்கு சேவை செய்யக்கூடியவர்கள், ஊழலுக்கு எதிராக போராடக்கூடியவர்கள் யார் என்று அவர்களுக்கே வாக்களியுங்கள்..
உங்கள் வாக்குகளுக்கு பொருத்தமான கட்சி மக்கள் விடுதலை முன்னணி மட்டுமே என தெறிவித்தார் .
மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் தோழர் அம்ஜத் லதீப் தலைமையில் இடம்பெற்ற இத் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தோழர் முஜீப் இப்றாகீம் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட தலைவர் அருன் ஹேமச்சந்திர மற்றும் வேட்பாளர்களும் , கட்சி ஆதரவாளர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்..
