இன்று கிராம நிருவாக அதிகாரத்திற்கான வாக்களிப்பு



கிராம நிருவாக அதிகாரத்திற்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகுநின்றது . மாலை 4 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க முடியும்.

இம்முறை வட்டார மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைகள் அடங்கிய கலப்பு முறையின் கீழ் தேர்தல் நடைபெறுகின்றது. இதன் கீழ் வட்டார அடிப்படையில் 60 சதவீதமான வாக்காளர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் 40 சதவீதமான பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படுவார்கள்.

மொத்தமாக 43 அரசியல் கட்சிகளையும், 222 சுயேச்சைக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 57 ஆயிரத்து 252 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இவர்கள் மத்தியிலிருந்து 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகளுக்காக எண்ணாயிரத்து 356 வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

இந்தத் தேர்தலில் ஒரு கோடி 57 லட்சத்து 60 ஆயிரத்து 867 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். நாடெங்கிலும் 14 ஆயிரத்து 374 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -