காலத்திற்கு பொருத்தமான வகையில் திருத்தப்படும் நிலையியற் கட்டளையின் மூலம் பாராளுமன்றம் மேலும் வலுவடையும் என்று தெரிவித்த அவர் ஒழுக்க நடைமுறையில் சாதாரண பொதுமக்களிலும் பார்க்க பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துக்காட்டாக செயற்படவேண்டும் என்றும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை திருத்தம் மற்றும் பாராளுமன்றத்தினருக்கான ஒழுக்க கோட்பாடுகள் குறித்து இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாத்தில் பிரதியமைச்சர் மேலும் உரையாற்றுகையில் , ஒழுக்கநெறிகள் மற்றும் நிலையியற் கட்டளைகளில் திருத்தத்தை மேற்கொள்வது குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் இறுதியில் உடன்பாடொன்றை எட்டமுடிந்தது. திருத்தம் விரிவான முறையிலும் முக்கியத்துவம் மற்றும் நவீன காலத்திற்கு பொருத்தமான வகையில் சமர்ப்பிப்பதற்கு முடிந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். பாராளுமன்ற அலுவல்களை நேரடியாக தொலைக்காட்சியினூடாக ஒளிபரப்புவதற்கும் , இலத்திரணியல் மூலம் ஒளிபரப்புவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நிலையியற் கட்டளையில் புதுவிடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது முக்கியமான விடயமாகும். பாராளுமன்ற அலுவல்கள் தொடர்ச்சியாக உயர்தரத்தை கொண்டதாக இருக்கவேண்டும். அதேபோன்று பொதுமக்களுக்கு இந்த விடயங்களை பார்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுட்டுள்ளது. இதனால் இது முற்போக்கு திருத்தங்களாகும்.
பாராளுமன்றம் தொடர்பில் சமூத்தின் மத்தியிலுள்ள வரவேற்பு அதிகரித்துள்ளது.
30 நிமிடங்கள் பிரதமரிடமிருந்து பதில்களை பெற்றுக்கொள்வதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் உள்ள நடைமுறை சம்பிருதாயம் ஆகும். அதனையே நாம் இங்கு செயற்படுத்துகின்றோம். இதனூடாக பிரஜைகளும் பாராளுமன்றமும் வலுவூட்டப்பட்டுள்ளன.
பிரதமரினால் முக்கிய பாரம்பரிய சம்பிருதாயம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.