வட்டாரங்களில் எவரும் தெரிவு செய்யப்படாத கிராமங்களுக்கே பட்டியல் உறுப்பினர்கள் தெரிவு செய்ய வேண்டும் பொது அமைப்புக்கள் கோரிக்கை



அப்துல்சலாம் யாசீம்-
ள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது வட்டாரங்களில் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட கிராமங்களுக்கு பட்டியல் (போனஸ்) உறுப்பினர்களை கட்சிகள் தெரிவு செய்வதை விடவும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டாத கிராமங்களுக்கு போனஸ் பட்டியலை வழங்க ஆவண செய்ய வேண்டுமென பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கம் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயும்
கிராமங்களில் காணப்படுகின்ற குறைபாடுகளை உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக வழங்கும் நோக்கிலேயே இந்த வட்டாரத்தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வட்டாரங்களில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றவர்கள் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் ஒவ்வொரு கட்சிகளிலும் போனஸ் பட்டியல் விபரங்களையும் அக்கட்சியின் பிரதானிகள் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனாலும் திருகோணமலை மாவட்டத்தில் பெண்கள் குறைந்த அளவிலேயே வெற்றி பெற்றனர். இருந்தபோதிலும் ஒவ்வொரு பிரதேச சபைகளிலும் நூற்றுக்கு 25 வீதம் பெண்களின் பங்கு தேவைப்படுகின்ற போதிலும் போனஸ் பட்டியலுக்கு பெண்களை தெரிவு செய்வதைப்போல ஒவ்வொரு பிரதான கட்சிகளும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படாத கிராமங்களுக்கு போனஸ் பட்டியலை வழங்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ஒரு வட்டாரத்திற்குள் இரண்டு கட்சிகளின் உறுப்பினர்கள் இருக்கின்ற வேளை மக்களுக்கு சிறந்த சேவைகள் இடம் பெறாத நிலைமை காணப்படுவதாகவும் கட்சிகளுக்குள்ளே முறண்பாடுகளும் உறுப்பினர்களுக்குள்ளே போட்டிகள் மாத்திரமே இடம் பெறுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே பிரதான கட்சிகளின் அமைப்பாளர்கள் போனஸ் பட்டியல் தெரிவின் போது வட்டாரங்களில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படாத கிராமங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்து மக்களுக்கு சிறந்த அபிவிருத்தி திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -