நுவரெலியா மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் 125 முறைப்பாடுகள் பதிவு



க.கிஷாந்தன்-

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரையில் 125முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும், எனினும் மோசமான சம்பவம் என குறிப்பிட்டு கூறத்தக்கவகையில் எதுவும் முறைப்பாடு செய்யப்படவில்லை என்றும் நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்தார்.

07.02.2018 அன்று நள்ளிரவுடன் முடிவடைந்த தேர்தல் பிரச்சாம் வரை சிறு சிறு முறைபாடுகளே 125 பதிவாகியுள்ளது. குறிப்பாக உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் வேட்பாளர்களால் முன்னெடுக்கப்ட்ட தேர்தல் பிரச்சாரங்களின் போது, வேட்பாளருக்கு ஆதரவு தேடி 10 பேர் மாத்திரமே செல்லாம் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்திருந்த போதிலும், தேர்தல் சட்டத்துக்கு மாறாக 10ற்கும் மேற்பட்ட நபர்கள் வேட்பாளருக்கு ஆதரவு தேடி பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர். இவ்வாறான முறைபாடுகளே அதிகமாக பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை பொலிஸாருக்கும், தேர்தல் அலுவலர்களுக்கும் மேற்கொண்டு வருகின்றனர்.

சனிக்கிழமை நடைபெறவுள்ள வாக்களிப்பிற்காக கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகளும்செய்யப்பட்டிருக்கின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -