நாட்டில் நம் சமூகம் அபிவிருத்தியும், சுபீட்சமும் அடைய வேண்டுமென்றால் UNP க்கு வாக்களிக்க வேண்டும்.

க.கிஷாந்தன்-

ந்த நாட்டில் நமது சமூகம் எதிர்காலத்தில் அபிவிருத்தியும், சுபீட்சமும் அடைய வேண்டுமென்றால் ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்த வேண்டும். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளில் பெருவாரியாக ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிப்பெற செய்தால் அது தமிழை் முற்போக்கு கூட்டணிக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றியாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பெப்ரவரி மாதம் 10ம் திகதி இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது பிரச்சார கூட்டம் ஒன்று 31.12.2017 அன்று காலை 11 மணியளவில் அட்டன் டீ.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பாராளுமன்ற தேர்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக நாம் போட்டியிட்டோம். அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியில் தங்கியுள்ள நாம் இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலிலும், போட்டியிடுகின்றோம்.

இந்த நாட்டில் இரண்டு பலம் பொருந்திய கட்சிகள் நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்து செயல்படும் நிலையில் நாம் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பக்கத்தை சார்ந்தவர்களாக இருக்கின்றோம்.

தமிழ் முற்போக்கு கூட்டணி மூன்று பிரதான கட்சிகளை கொண்டுள்ளது. மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி என ஒற்றுமையும், கூட்டுமாக ஒண்றினைந்து செயல்படுகின்றோம்.

இதனடிப்படையில் நடைபெறும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மலையக மக்கள் முன்னணி வேட்பாளர்கள் தொழிலாளர் தேசிய சங்க வேட்பாளர்கள் என இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அவ்வப்பகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

இதில் ஒரு விடயத்தை நன்றாக தெரிந்துக் கொள்ள வெண்டும். மலையக மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் போட்டியிடும் பகுதியில் தொழிலாளர் தேசிய சங்கத்தை சேர்ந்தவர்களும் இவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

அதேபோன்று தொழிலாளர் தேசிய சங்க உறுப்பினர்கள் போட்டியிடும் பகுதிகளில் மலையக மக்கள் முன்னணியின் அங்கத்தவர்கள் ஆதரவளிக்க வேண்டும். வேறுபாடுகளை கலைத்து ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டும்.

மற்றுமொரு விடயம் தான் தான் சபைக்கு தலைவர், என்னை தான் தேர்ந்தெடுப்பார்கள் என்றெல்லாம் கூறி மக்களிடம் வாக்கு கேட்க வேண்டாம். முதலில் சபைகளை வெற்றிக்கொள்வோம்.

பின் சபைகளின் பதவிகளுக்கு யாரை தேர்ந்தெடுப்பது தொடர்பில் கட்சிகளின் தலைவர்களெ தீர்மானிப்பார்கள் என்பதை நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும். மலையக தோட்டப்பகுதிகளில் பல்வேறு அபிவிரத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அந்த அபிவிருத்தி திட்டங்களுக்கு சக்தியாக அமைந்துள்ளவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான்.

அவரின் கரத்தை பலப்படுத்தும் பொழது மேலும் பல அபிவிருத்திகளை நாம் முன்னெடுக்க முடியும். அட்டன் நகரம் நவீன நகரமாக மாற்றம் செய்ய பிரதமர் முயற்சியில் திட்டங்கள் நடேந்தேறி வருகின்றது.

இந்த நிலையில் அட்டன் நகர சபை ஐ.தே.காவின் கட்டுப்பாட்டுக்கு வரவேண்டும். அதேபோன்று பொகவந்தலாவ நகரமும், நோர்வூட் நகரமும், அக்கரப்பத்தனை நகரமும் அபிவிருத்தி அடைய வேண்டும் என்றால் அவ்வப் பிரதேசத்தின் சபைகள் ஐ.தே.காவின் வசம் வரவேண்டும்.

நாட்டின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் பிரதமராக இருக்கின்றமையால் மலையக தோட்ட பகுதிகளில் அபிவிருத்தி பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் கண்டி, மாத்தளை, நுவரெலியா போன்ற பகுதிகள் தோட்ட அபிவிருத்திகள் மட்டுமின்றி பாடசாலை கல்வி அபிவிருத்திகளும் பிரதமரின் முயற்சியாலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால் அட்டன் ஹைலன்ஸ், அக்கரப்பத்தனை ஹோல்புறுக் போன்ற பாடசாலைகள் தேசிய ரீதியில் கல்வியில் முன்னேற்றம் கண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -