வவுனியா நகரையும் சூழவுள்ள பிரதேசத்தையும் அபிவிருத்தி செய்வோம். மஸ்தான்MP


வுனியா நகரசபை குடியிருப்பு வட்டாரம் 05 மற்றும் வவுனியா நகரசபை தேக்கவத்தை வட்டாரங்களில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான *கெளரவ மஸ்தான் காதர் அவர்களின்* தலைமையில் வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது.
அங்கு சிறப்புரையாற்றிய கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்
இம்முறை வவுனியா நகரசபையின் அதிகாரங்களை எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் கூறியதாவது
வவுனியா நகரையும் சூழவுள்ள பிரதேசத்தையும் அபிவிருத்தி செய்வதற்கான ஆணையை இம்முறை எமது கட்சிக்கு வழங்குவதன் மூலம் நாட்டில் உள்ள சிறந்த நகரங்களில் ஒன்றாக இந்த வவுனியா நகரசபையை திகழவைக்க எம்மால் முடியும்.
ஆகவே இந்த தேர்தலில் நீங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உங்களது வாக்குகளை பூரணமாக அளித்து எமது வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேற்படி நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -