அகமட் எஸ். முகைடீன்-
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நடைபெறும் கல்முனை பீச் பார்க் வேலைத்திட்டத்தை பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையிலான கட்டடக்கலை நிபுணர் குழு நேற்று (27) சனிக்கிழமை களவிஜயம் செய்து பார்வையிட்டது.
இக்கள விஜயத்தின்போது கட்டடக்கலை வடிவமைப்பு நிபுணர் சேனக்க, தொழில்நுட்ப நிபுணர் வித்தியாரத்ன, கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ரி. சர்வானந்தா, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அல்தாப் ஹூசைன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
கல்முனை பீச் பார்க் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை சிறப்புற அமைக்கும்வகையில் உள்வாங்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.