ஆங்கில ஆசிரியராய், ஆசிரிய ஆலோசகராய் பின்னர் அதிபராய் பணி புரிந்து வரும் பஸ்யால எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமாவின்'இரண்டும் ஒன்று' எனும் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா சென்ற 07.01.2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல் எளிய அலிகார் முஸ்லிம் மஹா வித்தியாலய கேட்போர் கூடத்தில் சுமார் 300 பேர் கொண்ட அவையினிலே வெகு விமர்சையாக இடம் பெற்றது.
இந்த நிகழ்வின் போது இலங்கையின் சகல மூத்த கவிஞர்களும் உயர் கல்விமான்களும் கூடியிருந்த கண்கொள்ளா ஒன்று கூடல் அது. மாணவன் அல்ஹாபில் எம்.ஆர்.எம்.முஸ்அப்இன் கிராத்துடன் நூலாசிரியரின் கணவரும் அலிகார் முஸ்லிம் வித்தியாலய பிரதி அதிபருமான எம்.ஏ.எம்.றிப்தி அவர்கள் மும்முரமாக சகல ஒழுங்கு வேலைகளையும் திட்டமிட்டுச் செய்ததுடன் வரவேற்புரையையும் நிகழ்த்தினார்கள். கல்லூரி அதிபரான ஏ.ஜே.எம்.புர்கான் தலைமை தாங்கினார்.
இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் நிகழ்ச்சிக்கு முன்னிலை தாங்கி முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளரும் நூலாசிரியரின் ஆசானுமான அஷ்ஷேய்க் வை.எல்.எம்.நவவி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்;. இந்நிகழ்வின் போது நூலாசிரியரின் தந்தையும் ஓய்வு பெற்ற அதிபரும் ஜே.பீயுமான அல்ஹாஜ் ஏ.சி.செய்யது அஹமது அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.
இந் நிகழ்வின் விஷேட அதிதிகளாக எம்.எம்;.எம்.இஸ்மாயில் பிரபல தொழில் அதிபர் சமூக ஆர்வலர் ஸ்தாபகர் அல்முஹ்ஸின் பவுண்டேஷன், நவமணியின் சிரேஷ;ட செய்தி ஆசிரியர்; எம்.எஸ்.எம்.ஸாஜஹான், கிண்ணியா முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் கலாபூஷணம் இலக்கிய வித்தகர் பீ.ரீ.அஸீஸ் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கொழும்பு பல்கழைக்கழகம் சிரேஷ;ட விரிவுரையாளர் அல்ஹாஜ் எம்.எம்.எம்.ஸாபிர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
ஆசிரியர் பற்றிய அறிமுக உரையினை ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருமான அல்ஹாஜ் எம்;.எச்.அஷ;ரப் அவர்களும் வாழ்த்துரைகளை ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றத்தின்தின் தலைவர் கலாபூஷணம் தமிழ் தென்றல் அலி அக்பர்,வலம்புரி கவிதா வட்டத்தின் தலைவர் கவிமணி என்.நஜ்முல் ஹுஸைன், ஐடிஎன், வசந்தம் டிவி எம்.ஸித்திக் ஹனீபா பாடினார்கள்.
கவி வாழ்த்தினை மேமன் கவி அவர்களும் நூல் ஆய்வினை தாஜுல் உலும் கலைவாதி கலீல் அவர்களும் செய்தார்கள். இதனைத் தொடர்ந்து நூல் வெளியீடு இடம் பெற்றது.
இந்நிகழ்வில்லாநூசிரியர்; எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா கிண்ணியா முன்னோடிகள் கலை இலக்கிய வட்டத்தின் சார்பாக பதக்கம் அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நூலாசிரியர் எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமாவின் ஏற்புரையும்;; நன்றியுரையும் இடம் பெற்றது. இது மிக நீண்ட உரையாக இடம் பெற்றது.
இந்நிகழ்ச்சியினை வெற்றிகரமாக தொகுத்து வழங்கியவர் வலம்புரி கவிதா வட்டத்தின் செயலாளர் இளநெஞ்சன் பீ.எம்.முர்சிதீன்.
