ஸ்ரீல. மு.கா. உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி முஸ்தபா பொங்கல் வாழ்த்து!
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பன்னெடுங்காலமாக நம் நாட்டில் வழக்கத்தில் உள்ள பழமொழியும் பொன்மொழியுமாகும். தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக்
கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. இந்த நந்நாளில் வீரமுனைத்தமிழ்மக்களுக்கும் வழி பிறக்கவுள்ளது என்பதைக்கூறி அனைத்து தமிழ்மக்களுக்கும் பொங்கல் வாழ்த்தைத் தெரிவிக்கின்றேன்.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேசசபையின் வீரமுனை வட்டார வேட்பாளரும் சிரேஸ்ட்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம்.முஸ்தபா விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் பொங்கல்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
மகரத்திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு இலங்கை மலேசியா சிங்கப்பூர் ஐரோப்பியநாடுகள் வட அமெரிக்கா தென் ஆபிரிக்கா மொரிசியசு என தமிழர் வாழும்அனைத்துநாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்துஅனேகத்தமிழர்களால்கொண்டாடப்படுகிறது.
தமிழர் திருநாள்... தைப் பொங்கல் அறுவடைத் திருநாள் என கூறப்படும் பொங்கல்பண்டிகை தமிழர் பண்டிகை ஆகும். பொங்கல் என்பதற்கு சாப்பிடும் பொங்கல் என்று
பொருள் அல்ல. பொங்கிப் பெருகி வருவது என்று பொருள். தமிழர்கள்
இருக்குமிடமெல்லாம் பொங்கல் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு என்று பெயர் இருந்தது. அதாவதுஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். உழவர்கள் தை மாதத்தின் முதல்
நாளில் அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான்
பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள்.
காலமெல்லாம் கை கொடுத்து உதவும் மழை சூரியன் விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி கூறும் நல் வாய்ப்பாக இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.
கிராமத்தில் இன்றளவும் தைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். எதுவாகஇருந்தாலும் தை பிறக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்பார்கள். தைமாதம் மிகவும் சிறந்தது. கல்யாணம் நிச்சயதார்த்தம் வளைகாப்பு கிரகப்பிரவேசம்என எல்லா சுபநிகழ்ச்சிகளுக்கும் இந்த மாதத்தில் குறைவிருக்காது.
இத்தகைய நாளில் எமது சம்மாந்துறைத் தொகுதி தமிழ்மக்களுக்கும் உலகின் ஏனைய தமிழ்மக்களுக்கும் பொங்கல் வாழ்த்தினைத் தெரிவிப்பதில் அகமகிழ்வடைகின்றேன்.
