கஹட்டோவிட்ட ரிஹ்மி -
இந்த நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டேமியன் டியுப்ஹோப் சென்ற வாரம் (04) அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களை அமைச்சில் சந்தித்தார். பொதுநலவாய நாடுகளில் இலஞ்ச, ஊழல் மற்றும் வெளிப்படைத்தன்மை சம்பந்தமாக ஆராய்வதே இதன் நோக்கம் என்று தெரிவித்த டியுப்ஹோப் அவர்கள், இலங்கை கடந்த காலங்களில் எடுத்துள்ள செயற்பாடுகளையும் வினவினார்.
இங்கு பதிலளித்த அமைச்சர், இந்த நாட்டின் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக இறுதி வருடங்களில் முயற்சிகளை எடுத்துள்ளோம். அதில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, விசாரணை ஆணைக்குழு போன்றவற்றை உருவாக்கினோம்.
இலஞ்ச ஊழலை குறைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளைத் துரிதமாக்கி, அதனது செயற்பாடுகளை சுயாதீனப்படுத்துவதற்கு அரசிற்கு முடியுமாகியுள்ளது. அத்துடன் அரச சேவையில் இலஞ்ச ஊழலை ஒழிப்பதற்கான வேலைத்திட்டம் விரைவில் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது. இலங்கை நாடானது அண்மைய நாட்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து தான் பெரிதும் மகிழ்ச்சியடைவதாக டியுட்கோப் அவர்கள் தெரிவித்தார். இது குறித்து அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கும் அறியப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியும் கலந்து கொண்டார்.
