ஹக்கீமின் நிலை 2020 இல் என்னவாகப் போகிறது?

ஊடகப்பிரிவு-

முன்னாள் இராணுவத் தளபதியும், முன்னாள் ஜனதிபாதி வேட்பாளருமான சரத் பொன்சேகா “ஜனநாயக கட்சி” என்ற (Democratic Party) பெயரில் கட்சி ஒன்றை அமைத்து அரசியல் செய்தபோது, இடைநடுவில் அந்தக் கட்சியைக் கலைத்துவிட்டு எவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியாக மாறினாரோ, அதே பாணியை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளதாக மாக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி தெரிவித்தார்.

மருதமுனையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அமீர் அலி 2020 ஆம் ஆண்டளவில் முஸ்லிம் காங்கிரஸை கலைத்து கண்டி மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி கலகெதர அமைப்பாளராக உத்தியோகப்பூர்வமாக மாறவுள்ள ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களையும், தொண்டர்களையும் நட்டாற்றில் விடப்போவதில் தனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை எனத் தெரிவித்தார்.

மர்ஹூம் அஷ்ரபின் காலத்தில் தேசியப் பட்டியலில் எம்.பியாகி, நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராக ஹக்கீம், அன்னாரின் மறைவின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தை கேட்டுப் பெற்றதாக அமீர் அலி தனது உரையில் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -