கல்முனை கடற்கரை பள்ளிவாசல் சுற்றுப்புற பிரதேசத்தை அழகுபடுத்தும் பணி


அகமட் எஸ். முகைடீன்-

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் சுற்றுப்புற பிரதேசத்தை அழகுபடுத்தலுடனான வாகன தரிப்பிடம் அமைக்கும் வேலைத்திட்டத்தினை பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையிலான கட்டடக்கலை நிபுணர் குழு நேற்று (27) சனிக்கிழமை களவிஜயம் செய்து பார்வையிட்டது.

இக்கள விஜயத்தின்போது கட்டடக்கலை வடிவமைப்பு நிபுணர் சேனக்க, தொழில்நுட்ப நிபுணர் வித்தியாரத்ன, கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ரி. சர்வானந்தா, கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் டாக்டர் இஸட்.எம். அஸீஸ், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அல்தாப் ஹூசைன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது குறித்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஒப்பந்தகார நிறுவனத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -