சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தொடர்ந்தும் செயலாற்றும்



எம்.ஐ.எம்.அஸ்ஹர் யு.கே.காலித்தீன்-
வக்பு சபையினால் அண்மையில் கலைக்கப்பட்ட மாளிகைக்காடு – சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை கலாசாரஅமைச்சின் கீழ் இயங்கும் வக்பு சபையின் உயர்நீதிமன்றமான தீர்ப்பாயத்திற்கு( Tribunal ) செய்த முறைப்பாட்டினை தொடர்ந்து தீர்ப்பாயம்ஏற்கனவே இருந்து வந்த சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையே தொடந்தும் செயலாற்ற வேண்டும் என கடந்த சனிக்கிழமை ( 27 ) வழங்கிய தீர்ப்பினை தொடர்ந்து சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா உள்ளிட்ட ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் பொதுமக்களால் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் வரவேற்கப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து இந்த தீர்ப்பை பெறுவதற்கு உதவி புரிந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் விசேட தொழுகையும் துவாப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -