கொட்டகலை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்


க.கிஷாந்தன்-

கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ டிவிசன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் 29.01.2018 அன்று இடம்பெற்றது.

காலை கணபதி வழிபாடுகளுடன் 7.30 மணி முதல் சுப முகூர்த வேளையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் பி. திகாம்பரம் ஹெலிகொப்டர் மூலம் ஆலயத்துக்கு மலர் தூவி வழிபாடு செய்தார்.

அத்தோடு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வன் ஜீவன் தொண்டமான் ஆகியோர் வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -