டெங்குவாக இருக்கக் கூடிய காய்ச்சல் நோய் ஒன்று முதன்முதலில் சீன மருத்துவ அறிகுறிகள் என்சைகிளோபீடியாவில் சீன பேரரசுக்காலத்தில் 265 -420 கி.பி பதிவு செய்யப்பட்டுள்ளது
இது பறக்கும் பூச்சிகளுடன் தொடர்புடையது நீர் நச்சுமையால் இது ஏற்பட்டுள்ளதாக அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது
அன்று தொட்டு இன்றுவரை டெங்கு ஆட்கொல்லி நோய்
பல உயிர்களை காவுகொண்டே வருகின்றது
இவ்வாறான நோய்களை தடுக்கும் முகமாக சுகாதார அதிகாரிகள் பல செயற்பாடுகள் எடுத்தாலும்
முழு வெற்றி கிடைப்பதில்லை
காரணம் பொதுமக்களாகிய எமது செயற்பாடுகளே
சுத்தமும் சுகாதாரம் உள்ள சூழலை எமது குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுப்பதில் நமக்கு முழு உரிமையும் கடமையும் இருக்கின்றது
ஆனால் இதனை நாம் கவணத்தில் கொள்வதே இல்லை
உயிர்களை இழக்கப்படும் போதே சிந்திக்கின்றோம்
ஏறாவூர் எனது பிரதேசம்
இதில் எறாவூர் நகரசபையினாலும்
சுகாதார வைத்திய அதிகாரிகளினாலும் பல விழிப்புணர்வுகள்
நடத்தப்பட்டே வருகின்றது
வீடு வீடாக சென்று
நீர் தாங்கிகள்
கிணறுகள்
மழை நீர் தேங்கி நிற்க்க கூடிய பாத்திரங்கள்
போன்ற வற்றை சுத்தப்படுத்தும் முகமாக விழிப்புணர்வு செய்கின்றார்கள்
இருந்தும் பொதுமக்களின் அசமந்தப்போக்கே இவ்வாறான நோய்களை வீட்டினுள் கொண்டு வருகின்றது.