க.கிஷாந்தன்-
அட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் மோப்ப நாயின் உதவியுடன் மஸ்கெலியா பகுதியில் வைத்து 24500 மில்லிகராம் கஞ்சாவுடன் 4 பேரும் வட்டவளை பகுதியில் கேரளா கஞ்சா சிறிய பக்கற்றுக்கள் வைத்திருந்த 3 பேருமாக மொத்தம் 7 பேர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வட்டவளை மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் இவர்களை 10.12.2017 அன்று அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அட்டன் கோட்டப் பொலிஸ் அதிகாரி புத்தி உடுகமசூரிய, கோட்டம் 1 உதவி பொலிஸ் அதிகாரி ரஞ்சித் தசநாயக்க, கோட்டம் 2 உதவி பொலிஸ் அதிகாரி சமன் பெரேரா ஆகியோரின் ஆலோசனைக்கமைய அட்டன் பொலிஸ் நிலையத்தின் தலைமையக கடமைப் பொலிஸ் பரிசோதகர் ஜயரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கமைய 09.12.2017 அன்று இரவு 8.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக நீர்கொழும்பு பகுதியில் இருந்து வருகைதந்த சுற்றுலாபயணிகளில் 4 பேர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.