திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்னால் வைத்து இன்று(10) பகல் ஒரு மணியளவில் 40 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 4ம் கட்டை கண்டிவீதி சீனக்குடா எனும் முகவரியைச் சேர்ந்த வயது (76) எனவும் தெரிவித்தனர்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுற்றிவலைப்பினை மேற்கொண்டபோது குறித்தநபரை பரிசோதனையிட்டவேலை தன்னிடம் 40 போதை மாத்திரைகள் இருந்ததன் குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர் திருகோணமலை தலைமையகப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரனைகளை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.விஜேசிங்க தெரிவித்தார்.
மற்று ஒருநபர் இன்று(10)காலை கிண்ணியா கச்சக் கொடித்தீவு சந்தியில் வைத்து எட்டு கிராம் கேரளா கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அரைஏக்கர் கிண்ணியா_05 எனும் முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட வயது 36 எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பரிசோதனையிட்ட போது தன்வசம் கேரளா கஞ்சா வைத்திருந்ததன் பேரில் கைது செய்யப்பட்டு கிண்ணியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரனைகளையும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.