மு.இராமசந்திரன், பி.கேதீஸ்,க.கிஷாந்தன்-
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாகலை பூண்டுலோயா பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து பஸ்ஸின் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் மோட்டர் சைக்கிளை செலுத்தியவர் ஸ்தலத்திலே பலியானதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்
பூண்டுலோயா நவகாடுதொரவ பகுதியைசேர்ந்த 36 வயதுடைய புத்திக சாமர ஹெட்டியாரச்சி என்பவரே இவ்வாறு பலியனார்
01.12.2017 காலை 9.30. மணியளவில் தலவாக்கலையிலிருந்து பூண்டுலோயா நோக்கி சென்ன இ.போ.ச பஸ்வண்டியில் பூண்டுலோயா பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் வட்டகொடை தேயிலை தொழிற்சாலைக்கருகில் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் ஸ்தலத்திலே பலியானார்
சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பஸ்ஸீன் சாரதி தலவாக்கலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர